Published : 08 Dec 2018 08:51 AM
Last Updated : 08 Dec 2018 08:51 AM

தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்று அறிவிப்பதற்கு எதிரான மல்லையாவின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கோரிக்கை

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி தப்பிச் சென்ற விஜய் மல்லை யாவை ‘தப்பியோடிய பொருளா தார குற்றவாளி’ என்று அறி விப்பதற்கு எதிராக மல்லையா, தாக் கல் செய்துள்ள மனுவுக்குப் பதி லளிக்குமாறு உச்ச நீதிமன்றம் அம லாக்கத்துறையிடம் கேட்டுள்ளது.

ரூ. 9,000 கோடி கடன் வாங்கி தப்பிச் சென்றுவிட்ட விஜய் மல் லையா, தான் ‘தப்பியோடிய பொரு ளாதார குற்றவாளி’ என்று முத் திரைக் குத்தப்படுவதற்கு எதிராக மனுத் தாக்கல் செய்துள்ளார். தன்னை தப்பியோடிய பொருளா தார குற்றவாளி என்று அறிவிப்பது, தான் வாங்கியக் கடனைத் திருப்பி அடைப்பதைக் கடினமாக்கிவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

விஜய் மல்லையா சார்பில் மூத்த வழிக்கறிஞர் ஃபாலி நரிமன் வாதாடினார். தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்ற சட்டப் பிரிவின் கீழ் விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டு, அவ ரது சொத்துகள் முடக்கப்படுவதால் கடனைத் திருப்பிச் செலுத்தும் முயற்சிகள் அனைத்தும் வீணாகும் நிலை உண்டாகும் என்றார்.

தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்ற சட்டப் பிரிவு இந்த ஆண்டு ஏப்ரலில் கொண்டுவரப்பட்டது. ஆனால், மல்லையா 2016 மார்ச் மாதமே இந்தியாவை விட்டு தப்பிவிட்டார். இந்த நிலையில் இந்தச் சட்டப் பிரிவின் கீழ் தான் சேர்க்கப்பட்டு தப்பியோடிய பொருளாதார குற்ற வாளியாக அறிவிக்கப்படக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண் டார்.

தான் பண மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், கடனை முழுவதுமாகத் திருப்பித் தருவதாகவும் கூறியிருப்பதால் ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்று அறிவிக்கப்படக் கூடாது’ என்று மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x