

வேதாந்தா குழுமம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய உருக்கு ஆலையை அமைக்கத் திட்ட மிட்டுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 45 லட்சம் மெட்ரிக் டன் உருக்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
பொகாரோவில் உள்ள எலெக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தை சமீபத்தில் வேதாந்தா குழுமம் வாங்கியது. அதன் விரிவாக் கமாக இப்புதிய ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள் ளார்.
இந்த ஆலை செயல்படத் தொடங்கும்போது இக்குழுமத் தின் உருக்கு உற்பத்தி ஆண் டுக்கு 70 லட்சம் டன்னாக உயரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆலை மூலம் 1.20 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறை முகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.