Published : 24 Sep 2014 10:57 AM
Last Updated : 24 Sep 2014 10:57 AM

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 431 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்த கத்தில் கடுமையான சரிவைச் சந்தித்தன. ஐரோப்பிய பிராந்தியத்திலிருந்து வரும் மோசமான தகவல்கள், சீனாவின் வேலையில் லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, செப்டம்பர் மாத எப் அண்ட் ஓ முடிவு நெருங்கியது மற்றும் முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்தது ஆகிய காரணங்களால் பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்து முடிந்தன.

ஜூலை 8ம் தேதிக்கு பிறகு பங்குச்சந்தைகள் ஒரே நாளில் சரிவது இப்போதுதான். சென்செக்ஸ் 431 புள்ளிகள் சரிந்து 26775 புள்ளியிலும், நிப்டி 128 புள்ளிகள் சரிந்து 8017 புள்ளியிலும் முடிவடைந்தன. தவிர மிட்கேப் குறியீடு 1.9 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 2.48 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன. அனைத்துத் துறை குறியீடு களும் சரிந்தே முடிவடைந்தன. குறிப்பாக ரியால்டி குறியீடு அதிகபட்சமாக 4.91 சரிந்தது. எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு 2.58%, பொதுத்துறை குறியீடு 2.4% மற்றும் கேபிடல் குட்ஸ் குறியீடு 2.4 சதவீதமும் சரிந்து முடிவடைந்தன.

30 குறியீடுகள் அடங்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஐடிசி, என்.டி.பி.சி., மாருதி சுசூகி, மற்றும் ஹெச்.யூ.எல். ஆகிய பங்குகள் மட்டுமே உயர்ந்து முடிவடைந்தன. மற்ற அனைத்துப் பங்குகள் சரிந்தன. குறிப்பாக சிப்லா, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி. ஆகிய பங்குகள் கடுமையாக சரிந்து முடிவடைந்தன. திங்கள்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 186 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்றிருக்கிறார்கள். பங்குச்சந்தை சரிந்தாலும், வரும் காலத்தில் பல சாதக அம்சங்கள் இருப்பதாகவே வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

குறிப்பாக மோடியின் அமெரிக்க பயணம், மஹாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநில தேர்தல்கள் உள்ளிட்டவை சந்தைக்கு சாதகமாக இருக்கக் கூடும். அதே சமயத்தில் பணவீக்கமும், வட்டி விகிதமும் சந்தைக்கு சவால் என்பதையும் அவர்கள் மறுக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x