

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ளார். பிஏசி அக்யுசிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரிலான இந்த நிறுவனம் பெங்களூருவில் கொரமங்களா எனுமிடத்தில் அமைந்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தில் தனக்குள்ள 5 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு விற்றுவிட்டு அதிலிருந்து விலகிய சச்சின் இப்போது புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங் களில் முதலீடு செய்யும். 2007-ம் ஆண்டு பிளிப்கார்ட் தொடங்கப் பட்ட அலுவலகத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் இப்புதிய அலுவலகம் அமைந்துள்ளது.