புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம்

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் அறிமுகம்
Updated on
1 min read

புதிய அம்சங்களுடன் ரூ. 20 நோட்டை விரைவில் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரூ.50, ரூ.100, ரூ.500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது. மேலும், பணம் மதிப்பு நீக்க நடவடிக்கை யின் போது புதிதாக ரூ.200, ரூ.2000 நோட்டுகளை அறிமுகப்படுத் தியது. இந்த ரூபாய் நோட்டுகள் மகாத்மா காந்தி (புதிய) தொடர் வரிசையில் வெளியிட்டது. இந்த நிலையில், பல்வேறு புதிய அம்சங்களுடன் புதிதாக ரூ.20 நோட்டை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை யில் 492 கோடி 20 ரூபாய் நோட்டு கள் புழக்கத்தில் இருந்தன. இந்த ஆண்டு புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளில் 20 ரூபாய் நோட்டின் பங்களிப்பு 9.8 சதவீதமாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in