Published : 13 Dec 2018 10:22 AM
Last Updated : 13 Dec 2018 10:22 AM

சில்லறை பணவீக்கம் 2.3% ஆகக் குறைவு

சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 16 மாதங்களில் இல்லாத குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விலை குறியீடு மூலம் அளவிடப்படும் சில்லறை பணவீக்க விகிதம் கடந்த நவம்பர் மாதத்தில் 2.3 சதவீதமாகக் குறைந் துள்ளது. அக்டோபர் மாதத்தில் உற்பத்தி வளர்ச்சி 8.1 சதவீதமாக வளர்ச்ச்சி அடைந்துள்ள காரணத் தினால், நவம்பர் மாதத்துக்கான சில்லறைப் பணவீக்கம் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.31 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் 4.88 சதவீதமாக இருந்தது.

உணவுப் பொருள்களின் விலை குறைவு, சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை குறைவு ஆகிய காரணங்களால், ரிசர்வ் வங்கி, சமீபத்தில் நடந்து முடிந்த நிதிக் கொள்கை கூட்டத்தின்போது அக்டோபர் முதல் மார்ச் வரை யிலான காலகட்டத்துக்கான சில் லறை பணவீக்க கணிப்பை முன்பு கணிக்கப்பட்ட 3.9-4.5 சதவீதம் என்ற அளவிலிருந்து 2.7-3.2 சதவீதமாகக் குறைத்தது குறிப்பிடத் தக்கது.

நேற்று ரிசர்வ் வங்கி கவர் னராக பொறுப்பேற்றுள்ள சக்தி காந்த தாஸ் கூறுகையில், ரிசர்வ் வங்கி கணித்த அளவில்தான் பண வீக்கம் இருக்கிறது. வரும் மாதங் களிலும் இந்த வரம்பிலேயே இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இருந்தாலும் தொடர்ந்து பண வீக்கத்தைக் கண்காணிக்க வேண் டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x