Published : 18 Sep 2014 11:00 AM
Last Updated : 18 Sep 2014 11:00 AM

டாபரின் நூதன கொசு விரட்டி

நுகர்வோர் பொருள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டாபர் நிறுவனம் நூதனமான அதாவது கையில் அணியும் வகையிலான (ரிஸ்ட்பேண்ட்) கொசு விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் பிரபலமான ஓடோமாஸ் பெயரில் இந்த வகை `ரிஸ்ட்பேண்ட்’கள் விற்பனைக்கு வந்துள்ளன.

குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த `ரிஸ்ட்பேண்ட்’களில் கார்ட்டூன் சித்திரங்கள் இடம்பெறும். இதற்காக `போகோ’ நிறுவனத்துடன் டாபர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி `ரிஸ்ட்பேண்ட்’களில் `சோட்டா பீம்’ உருவம் இடம்பெறும்.

முற்றிலும் இயற்கை மூலிகைகளைக் கொண்ட இந்த கொசு விரட்டிகள் தண்ணீரால் கெடாதவகையில் (வாட்டர்ஃபுரூப்) தன்மையுடன் வெளிவந்துள்ளது. இத்தகைய கொசு விரட்டிகள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது கொசு கடிக்காமல் தடுக்க உதவும். 15 நாள்கள் செயல்படக்கூடிய ரிஸ்ட்பேண்ட் விலை ரூ. 199. பேட்ச்கள் 12 மணி நேரம் செயல்படுபவை. இவை 10 மற்றும் 24 அடங்கிய பேக்குகளில் வெளிவந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x