Published : 30 Dec 2018 09:17 AM
Last Updated : 30 Dec 2018 09:17 AM

ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் தமிழகம் இரண்டாமிடம்

கிராமங்களில் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா இன்டர்நெட் பயன் பாட்டில் புதிய மைல்கல்லை எட்டி யுள்ளது. அதேசமயம், இன்டர்நெட் பயன்பாடு கிராமப்புற பகுதிகளை முழுமையாகச் சென்றடைய வில்லை. இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்து வோர் நகரங்களில்தான் அதிகம் வசிக்கின்றனர். இந்தநிலையில் கிராமங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இமாச்சலபிரதேசம் முதலிடத்தில் உள்ளது தெரியவந் துள்ளது. தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மகாராஷ் டிரா, குஜராத் ஆகிய வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் கிராமங் களில் ஸ்மார்ட் போன் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 30 சதவீதமாக உள்ளது.

தொலை தொடர்பு நிறுவனங்கள் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளன. மேலும், நவீன தொழில்நுட்பம், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு கூடுதல் அலைக் கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. நெட்வொர்க் விரிவடைந்துள் ளது. இணைத்தல் மற்றும் கையகப் படுத்துதல் நடவடிக்கையால் ஒருங்கிணைந்த நெட்வொர்க் உருவாகியுள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் அதிக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும், குறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன் களும் கிடைப்பதால் கிராமங்களில் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மக்களவையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 43.36 சதவீத கிராம மக்கள் ஸ்மார்ட் போன் வைத்துள்ளனர். தமிழகத் தில் கிராமங்களில் 41.98 சதவீதத் தினர் ஸ்மார்ட் போன்கள் பயன் படுத்துகின்றனர்.

தமிழகத்தில் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிஜிஎம் (தமிழ்நாடு) ராஜூ கூறுகையில், நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் அதிகளவில் வாடிக்கையாளர்கள் இருக்கின் றனர். இதில் குறிப்பாக கிராமப்புறங் களில் அதிகளவில் வாடிக்கை யாளர்கள் இருக்கின்றனர். தமிழகத் தில் அடிப்படை கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பதால் சிறந்த சேவையை வழங்கி வருகிறோம். இங்குள்ள அனைத்து கிராமங்களி லும் நிறுவனத்தின் விற்பனை மையங்கள் இருக்கின்றன. மேலும் பல பஞ்சாயத்துகளில் வைஃபை வசதியும் செய்து கொடுத்துள் ளோம். கிராமங்களில் ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.

பிஎஸ்என்எல் தவிர்த்து இதர தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கும் கிராமங்களில் அதிகள வில் வாடிக்கையாளர்கள் இருக்கின் றனர். இதர மாநிலங்களுடன் ஒப் பிடும் போது தமிழகத்தில் அதிகள வில் நகரங்கள் இருக்கின்றன. இங்குள்ள கிராமங்கள் முழுமை யாக கிராமத்தின் தாக்கத்தை கொண்டிருக்கவில்லை. பெரும் பாலான கிராமங்கள் புறநகர் பகுதிகளாகத்தான் இருக்கின்றன. எனவே, தமிழகத்தில் கிராமங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிக மாக இருக்கிறது என்று ஊரக மேம்பாட்டு துறை அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x