

அமெரிக்க அரசு ஹெச்1பி விசா விதிமுறைகளில் கொண்டுவந் துள்ள மாற்றங்கள் கவலை அளிப் பதாக தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்ற முழுக்கத்தை முன்னெடுத்ததி லிருந்து விசா தொடர்பாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார். அதனால் ஏற்கெனவே அமெரிக்கா வில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஹெச்1பி விசா நடை முறையில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது அமெரிக்க அரசு.
அதாவது, உயர் பதவியில் உள்ள, அதிக சம்பளம் வாங்குகிற பணியாளர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்படும் எனக் கூறியுள்ளது. மேலும், இதற் கான விண்ணப்பத்தை நிறுவனம் ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்தப் புதிய மாற்றம் குறித்து கருத்துகளை தெரிவிக்க டிசம்பர் 3 முதல் ஜனவரி 2வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் ஹெச்1பி விசாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள இந்த மாற்றம் பெரும் கவலை அளிப்பதாகக் கூறி யுள்ளது. இதுகுறித்து நாஸ்காம் கூறியதாவது,
2019ம் ஆண்டுக்கான விசா வழங்குவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்தப் புதிய மாற்றங்கள் கவலை அளிக்கிறது. இது அமெரிக்க வேலைவாய்ப்பு களில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். நாஸ்காம் உறுப்பினர் கள் அமெரிக்காவில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ள னர். 1.5 லட்சம் வேலைவாய்ப்பு களை உருவாக்கியுள்ளனர். எனவே ஹெச்1பி விசா மாற்றங்கள் குறித்து கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியது.