

நவம்பர் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தைகளில் ரூ. 12,260 கோடி முதலீடு செய்துள்ளனர். இது கடந்த பத்து மாதத்தில் இல்லாத உச்சமாகும்.
செப்டம்பர், அக்டோபர் இரண்டு மாதங்களிலும் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை விற்று வெளியேறினர். புதிதாக முதலீடு செய்வதும் குறைந்தது. இதனால் சந்தைக் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.
இந்நிலையில் நவம்பர் மாதத் தில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது மேலும் இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் ஏற்றம் கண்டது. இந்தக் காரணங் களினால் மீண்டும் அந்நிய முதலீட் டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தை களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ. 12,260 கோடி வெளிநாட்டு முதலீடு குவிந்துள் ளது. இந்த ஆண்டில் ஜனவரி (ரூ. 22,240 கோடி) மாதத்துக்குப் பிறகு, நவம்பரில் தான் அதிக அளவு முதலீடு குவிந்துள்ளது.
இதில் ரூ. 6,913 கோடி பங்குகளிலும், ரூ. 5,347 கோடி கடன் சந்தையிலும் முதலீடு செய்யப் பட்டுள்ளது.