2018-19 ஏப்ரல்-அக்டோபர் காலக்கட்டத்தில் ரூ.38,896 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு- மக்களவையில் தகவல்

2018-19 ஏப்ரல்-அக்டோபர் காலக்கட்டத்தில் ரூ.38,896 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு- மக்களவையில் தகவல்
Updated on
1 min read

2018-19, ஏப்ரல்-அக்டோபர் காலக்கட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு மட்டும் ரூ.38,896 கோடி மதிப்புக்கு நடைபெற்றுள்ளதாக மக்களவையில் இன்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 6585 கேஸ்களில் இத்தகைய வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது. மத்திய நிதி இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா இன்று மக்களவையில் தெரிவிக்கையில், மத்திய கலால் வரி சுமார் 398 கேஸ்களில் ரூ.3,028 கோடி ஏய்க்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேவை வரி ஏய்ப்பு சுமார் 3,922 கேஸ்களில் ரூ.26,108.43கோடிக்கு நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

சுமார் 12,711 சந்தர்ப்பங்களில் சுங்க வரி ஏய்ப்பு ரூ.6,966.04 கோடி என கண்டறியப்பட்டுள்ளது.

சேவை மற்றும் சரக்கு வரியான ஜிஎஸ்டி சுமார் 6,585 கேஸ்களில் ரூ.38,895.97 கோடி கண்டறியப்பட்டுள்ளது என்று எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

7 மாதக் காலக்கட்டத்தில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ரூ.9,480 கோடியை மீண்டும் வரிவசூல் செய்துள்ளது. சேவை வரி ஏய்ப்பில் ரூ.3,188 கோடி  மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அதே போல் கலால் வரி ஏய்ப்பில் ரூ.383.5 கோடியும், சேவை வரியில் ரூ.1600.84 கோடியும் ஏய்ப்பிலிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது என்று சுக்லா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in