Published : 22 Nov 2018 10:14 AM
Last Updated : 22 Nov 2018 10:14 AM

ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகும் எண்ணமில்லை: ஜூகர்பெர்க் திட்டவட்டம்

ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகும் எண்ணமில்லை என்று மார்க் ஜூகர்பெர்க் திட்டவட்டமாக கூறியுள்ளார். சமூக வலைதள நிறு வனமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜூகர்பெர்க், தலைவர் பொறுப் பிலிருந்து விலக வேண்டும் என முதலீட்டாளர்களிடமிருந்து எழுந்த கோரிக்கையை அடுத்து ஜூகர் பெர்க் இந்த விளக்கத்தினை அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலை மைச் செயல்பாட்டு அதிகாரியான ஷெரில் சாண்ட்பெர்க் மீது விமர் சனம் எழுந்ததை அடுத்து ஜூகர் பெர்க் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக ஜுகர்பெர்க் கூறுகையில், ஷெரில் நிறுவனத் தில் மிக முக்கியமான பங்கு வகிப் பவர், பல்வேறு விவகாரங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டவர். 10 ஆண்டுகள் நிறுவனத்தின் மிக முக்கியமான அங்கத்தினராக இருந்தவர் என்றார்.

ஃபேஸ்புக் நிறுவனம் தொடர்ச் சியாக பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் சேர்ந்து ரகசிய பிரசாரத்தினை மேற் கொண்டது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின்னர் கேம் பிரிட்ஜ் அனாலிட்டிகா என்கிற பகுப் பாய்வு நிறுவனத்துடன் இணைந்து தகவல் மோசடியில் ஈடுபட்டது என்கிற சர்ச்சை உருவானது. பல கோடி பயனாளிகளின் தகவல்களை தவறாக கையாள்கிறது என்கிற சர்ச்சையைத் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் சந்தித்து வருகிறது.

சமீபத்தில் ரஷ்ய தேர்தலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பாதகமான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சென் றது என ஒரு புலனாய்வு தகவல் வெளியானது. இதன் மூலம் ஃபேஸ் புக் நிறுவனம் மக்களை தவறாக வழி நடத்தியுள்ளது என தி நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந் தது. இது குறித்து மார்க் கூறுகை யில், அனைத்து தகவல்களும் சரி யானது என்று சொல்ல முடியாது. இதுகுறித்து எனக்கு எதுவும் தெரி யாது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஃபேஸ்புக் நிறுவனம் வாஷிங் டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மக்கள் தொடர்புத் துறை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி அதன் மூலம் நிறுவனத்தின் எதிராளிகள் மற்றும் விமர்சகர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

அனைத்து நாடுகளின் அரசியலிலும் ஃபேஸ்புக் குறுக்கீடு செய்கிறது என்கிற வாதத்தினையும் மார்க் மறுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x