Published : 23 Nov 2018 10:42 AM
Last Updated : 23 Nov 2018 10:42 AM

பாலில் கலப்படத்தை கண்டுபிடிக்க ஸ்மார்ட்போனில் நவீன வசதி: ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு

பாலில் கலப்படம் இருந்தால் இனி ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டுபிடிக்கும் வசதியை ஹைதரா பாத் ஐஐடி மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

பாலில் கலப்படம் என்பது மிகவும் சவாலானதாக இருந்து வருகிறது. கால்நடை நலத்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக் கையில் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களில் 68.7 சதவீதம் கலப்படம் என்று கூறியுள்ளது.

பால் பொருள்களில் வாழ்நாளை அதிகரிக்க சோப்பு, குளுக்கோஸ், யூரியா, உள்ளிட்டவை கலக்கப் படுவதாகவும் கூறியுள்ளது. மேலும் பார்மலின் உள்ளிட்ட வேதிப் பொருள்களும் கலக்கப்படுகின் றன. கலப்படம் இருப்பதை அறியா மலும், வேறு வழியில்லாமலும் கோடிக்கணக்கான மக்கள் தினந் தோறும் பால் பொருள்களை நுகர்ந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பாலில் கலப் படம் செய்யப்பட்டிருக்கிறதா இல் லையா என்பதை ஸ்மார்ட்போன் மூலம் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தை ஹைதராபாத் ஐஐடி எலெக்ட்ரிக் இன்ஜினீயரிங் மாண வர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹாலோகுரோமட்டிக் என்று அழைக்கப்படும் நானோ அள விலான இண்டிகேட்டர் காகிதத் தில் சிப் பொருத்தி சென்சார் செய் யும் வகையில் உருவாக்கியிருக் கிறார்கள்.

இது நைலான் பைபரில் மூன்றுவிதமான டைகள் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிற மாற்றங்களை மிகச் சரி யாகக் கண்டறியும் வகையில் ஸ்மார்ட்போனுக்கான அல்காரி தத்தை வடிவமைத்துள்ளார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பில் தலைமை தாங்கிய மாணவர் கோவிந்த் சிங் இது குறித்து கூறு கையில், “பாலில் கலப்படத்தைக் கண்டறியும் தொழில்நுட்பங்கள் செலவு மிகுந்தவையாகவும், கோடிக்கணக்கான நுகர்வோர் களுக்கு எளிதில் கிடைக்கும் வகை யிலும் இல்லை.

எனவே எளிமை யான செலவு குறைந்த எல்லோருக் கும் கிடைக்கும் வகையிலான தொழில்நுட்பம் வேண்டும் என்று யோசித்தபோதுதான் இது உருவானது” என்றார்.

சென்சார் உள்ள காகிதம் பாலில் தோய்க்கப்படும். அந்தக் காகிதத்தில் ஏற்படும் நிறமாற்றம் ஸ்மார்ட்போன் கேமராவில் படமாக் கப்பட்டு, அல்காரிதம் மூலம் அதன் pH அளவை எளிதில் காண முடியும். இதன்மூலம் பாலில் கலப் படம் உள்ளதா இல்லையா என் பதை எளிதில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x