Published : 16 Nov 2018 08:43 AM
Last Updated : 16 Nov 2018 08:43 AM

வறுமை ஒழிப்புக்கு விரைவான வளர்ச்சி அவசியம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தல்

நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் பொருளாதார வளர்ச்சி மிகவும் அவசியம். அதுவும் விரைவான வளர்ச்சியாக இருக்கவேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தினார்.

டெல்லியில் நடைபெற்ற 25-வது சர்வதேச சேமிப்பு மற்றும் சில்லரை வர்த்தக வங்கி மாநாட் டில் உரையாற்றிய அவர், குறிப் பிட்ட இலக்கை நோக்கி முன்னே றும் சமூகம் நீண்ட காலம் அல்லது கால வரையறை இன்றி காத்திருத் தல் என்பது இயலாதது. ஏழைமக் களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டியது மிகவும் அவசியம்.

இந்தியா போன்ற நாடுகளில் உயர் வேக வளர்ச்சி மிகவும் அவசி யம். உயரிய வளர்ச்சியை எட்டுவ தன் மூலம்தான் வறுமை பிடியில் உழல்வோர் பலரை அதிலிருந்து மீட்க முடியும். அத்துடன் அவர் கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்து வதும் அவசியம். அபரிமித வளர்ச்சி யால் விளையும் ஆபத்துகளையும் உணர்ந்துள்ளோம். வளர்ச்சியின் விளைவாக சிலர் பயனடைவதும், பலர் விடுபடுவதும் நிகழும்.

இது மாதிரி விடுபடுபவர்களுக் கும் பலன் கிடைக்கச் செய்வது பொருளாதார வளர்ச்சி மட்டுமே. மிக மெதுவான வளர்ச்சிக்காக நீண்ட காலம் காத்திருப்பதை எந்த ஒரு குறிக்கோள் கொண்ட சமூகமும் ஏற்காது என்று சுட்டிக் காட்டினார்.

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்ததுதான் வங்கிச் சேவை இல்லா தவர்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்கச் செய்வதாகும். அதாவது நிதி அற்றவர்களுக்கு நிதி அளிப் பது, சேவை கிடைக்காதவர் களுக்கு அது கிடைக்கச் செய் வதும் ஆகும்.

வங்கிகள் அதிலும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத் தின்கீழ் ஒரு சில மாதங்களில் 33 கோடி கணக்குகளை தொடங்கின என்பதையும் சுட்டிக் காட்டினார்.

தொடக்கத்தில் வங்கிக் கணக் கில் ஒரு ரூபாய் இல்லாமல் தொடங் கப்பட்டது. ஆனால் நாளடைவில் மக்கள் அந்தக் கணக்கில் பணம் போடத் தொடங்கினர். வங்கிச் சேவையை அவர்கள் பயன்படுத்து வதை ஊக்குவிக்கும் வகையில் ஓவர்டிராப்ட் வசதியும் அளிக்கப் பட்டது என்றார்.

இந்தியாவில் காப்பீடு பெறாத வர்கள், ஓய்வூதியம் பெறாதவர் கள் எண்ணிக்கை அதிகம். இதைக் கருத்தில் கொண்டே கட்டுபடியா கும் பிரீமியத்துடன் காப்பீடு வசதியை, சமூக காப்பீடு திட்டத்தை இந்தக் கணக்கு வைத்திருப்பவர் களுக்கு அளிக்கப்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

ஏறக்குறைய 14 கோடிமக்கள் விபத்து காப்பீடு எடுத்துள்ளனர். 5.5 கோடி பேர் ஆயுள் காப்பீடு திட்டத்தை தேர்வு செய்துள்ளதை யும் அவர் சுட்டிக் காட்டினார்.

இது தவிர குறைந்த பிரீமியத்திலான ஓய்வூதிய திட்டம் அடல் பென்ஷன் யோஜனா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு 60 வயதுக்கு மேற்பட்ட வயதினருக்கு ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிதி கிடைக்காதவர்களுக்கு நிதி கிடைக்கச் செய்வதற்காக தொடங்கப்பட்டதுதான் முத்ரா திட்டமாகும். இந்த திட்டமானது செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் நமது பொருளாதாரம் டிஜிட்டல் பொருளாதாரமாக மாறும். பொருளாதாரத்தை சீரமைக்கும் நடவடிக்கையாக பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. இதன் மூலம் மக்களின் பணம் வங்கி யில் புழக்கத்துக்கு வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரே சீரான வரி விதிப்பு நாடு முழுவதும் அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது. இதன் மூலம் பலமுனை வரிகள் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இன்னமும் சில மாற்றங் களைச் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் ஜேட்லி கூறினார்.

பிரதமர் ஜன்தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓவர் டிராப்ட் அளவு ரூ. 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி சேவைகள் துறை செயலர் ராஜீவ் குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x