

டாஃபே நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த ஐஎஸ்இகேஐ அண்ட் கோ-வுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரபலமானது டாஃபே. இந்நிறுவனம் விவசாயத் துக்குத் தேவையான டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட கருவி களைத் தயாரிக்கிறது.
இந்நிறுவனம் ஐப்பான் நிறு வனத்துடன் சேர்ந்து காம்பாக்ட் டிராக்டர்களை தயாரிக்க ஒப்பந் தம் செய்துள்ளது.
இதன்படி டாஃபே நிறுவனத்துக் குச் சொந்தமான ஆலையில் காம் பாக்ட் டிராக்டர்களை தயாரிப் பதற்கான தொழில்நுட்பத்தை ஜப்பானிய நிறுவனம் அளிக்கும்.
54 ஹெச்பி டிராக்டர்
இதன் மூலம் 35 ஹெச்பி முதல் 54 ஹெச்பி வரையிலான திறன் கொண்ட டிராக்டர்களை டாஃபே தயாரிக்க உள்ளது. பன்முகப் பயன்பாடுகளைக் கொண்ட இந்த காம்பாக்ட் டிராக்டர் பல்வேறு விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
இதற்கான ஒப்பந்தத்தில் டாஃபே நிறுவனத் தலைவர் மல்லிகா _ஸ்ரீனிவாசன் மற்றும் ஐஎஸ் இகேஐ நிறுவனத் தலைவர் கிகுசி ஆகியோர் கையெழுத்திட்ட னர்.