Published : 26 Nov 2018 10:38 AM
Last Updated : 26 Nov 2018 10:38 AM

ரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை உயர்த்த நிறுவனங்கள் முடிவு

டிவி உள்ளிட்ட வீட்டு உபயோ கப் பொருள்களின் விலையை உயர்த்த வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். விழாக்கால விற்பனை தொடங்க உள்ள நிலையில் விற்பனை சுமூக மாக நடக்க இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு நிக ரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, சுங்க வரி அதி கரிப்பு போன்ற காரணங்களினால் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் உற்பத்தி யாளர்களின் தொழில் உள்ளீடு செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் எனத் தொடர்ந்து விழாக்காலங்கள் வருவதால், விழாக்கால விற் பனையை முன்னிட்டு இந்த விலை உயர்வை அமலுக்குக் கொண்டு வருகின்றன. ஏற்கெனவே பெரும் பாலான நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. தற்போது பானாசோனிக் நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலை 7 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது.

இது குறித்து பானாசோனிக் இந்தியப் பிரிவு சிஇஓ மணிஷ் ஷர்மா கூறுகையில், “கடந்த சில மாதங்களில் தொடர்ந்து டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது. இதனால் நிறுவனத்தின் செலவீனம் அதிகரித் தது.

இதைச் சரிசெய்ய நுகர்வோர் மீது சுமை ஏற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றாலும், சந்தை சூழலால் எங்களுடைய தயாரிப்பு களின் விலையை 5-7 சதவீதம் உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறோம்” என்றார்.

ஹயர் நிறுவன இந்தியத் தலைவர் எரிக் பிரகன்சா கூறுகை யில், “மிக நெருக்கடியான சூழலில் தான் இந்த விலை உயர்வு நட வடிக்கை எடுக்கப்படுகிறது. இது தவிர்க்க முடியாதது. வீட்டு உபயோகப் பொருள்கள் மீதான விலை உயர்வு விழாக்கால விற் பனையை ஒட்டி அமலுக்கு வரு கிறது. ஏனெனில் இந்த சமயத்தில் தான் இந்தியர்கள் அதிகளவில் கன்ஸ்யூமர் டியூரபிள் பொருள் களை வாங்குகிறார்கள்” என்றார்.

ஓணம், தீபாவளி ஆகியப் பண்டிகைகளுக்கு முன்பே இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுக்காததால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் நிறுவனங்கள் தெரிவிக் கின்றன.

நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளையன்சஸ் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் அறிக்கைப் படி கடந்த சில மாதங்களில் வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனை முற்றிலுமாகப் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஓணம் சமயத்தில் கேரளாவில் வெள் ளம் ஏற்பட்டதால் முற்றிலுமாக விற்பனை பாதிக்கப்பட்டது என்று கோத்ரேஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் துணை தலைவர் நண்டி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x