

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக வர்த்தகக் கொள்கைகளை மீறுவதாக வந்த புகாரை விசாரிக்க குழு ஒன்றை உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர்டொ னால்ட் ட்ரம்ப், இறக்குமதியாகும் ஸ்டீல், அலுமினிய பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளார். இது உலக வர்த்தக விதிமுறைகளுக்கு எதிரானது எனஉலக நாடுகள் கூறி வருகின்றன.
இது தொடர்பாக சீனா, ஐரோப்பிய யூனியன், கனடா உள்ளிட்ட நாடுகள் உலக வர்த்தகஅமைப்பிடம் புகார் அளித்திருந்தன. இந்த நிலையில் இந்த விவகாரத்தை விசாரிக்க குழுவை அமைத்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பின் அதிகாரிகள் கூறினர்.