உணவு தானியங்கள் பேக்கேஜில் 100% சணல்

உணவு தானியங்கள் பேக்கேஜில் 100% சணல்
Updated on
1 min read

உணவு தானியங்களை பேக்கேஜ் செய்வதில் 100 சதவீத சணல் பைகளைப் பயன்படுத்த வேண் டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சணல் உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

சணல் உற்பத்தி துறையை நம்பி பல லட்சம் விவசாயக் குடும்பங் கள் உள்ளன. மேலும் இந்தத் துறையில் உள்ள வேலை வாய்ப்பை நம்பி 3.7 லட்சம் பேர் உள்ளனர். சணல் துறையின் வளர்ச்சியின் பொருட்டும், இந்தத் துறையை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பொருட்டும் உணவு தானியப் பொருள்களை 100 சத வீத சணல் பைகளில் பேக்கேஜ் செய்ய வேண்டும் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பொருளாதார விவகாரங்கள் துறையின் அமைச்சர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டதாவது, இதுவரையிலும் சணல் உற்பத்தியாளர்களிடமிருந்து பெரும்பாலும் அரசுதான் சணல் பைகளை வாங்கிவருகிறது. ஒவ் வொரு வருடமும் ரூ. 6500 கோடி மதிப்புக்கு சணல் பைகள் வாங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் துறையின் வளர்ச்சி மிகவும் அவசியம் என்பதா லும், பேக்கேஜிங் முறையில் ஆரோக்கியமான சூழலைக் கொண்டுவரவும், சணல் துறையை வாழ்வாதாரமாக நம்பியிருப்பவர் களின் நலனுக்காகவும், பேக் கேஜிங் சதவீதத்தை 90லிருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிழக்கு மற்றும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும், சணல் உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவர் களும் பயனடைவார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in