Published : 05 Nov 2018 09:40 AM
Last Updated : 05 Nov 2018 09:40 AM

இரண்டாம் கட்ட மூலதனமாக பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ. 54,000 கோடி: நிதி அமைச்சகம் தகவல்

பொதுத்துறை வங்கிகளுக்கு மத் திய அரசு அறிவித்த மூலதனத்தில், இரண்டாம் கட்ட வழங்கல் இந்த மாத இறுதிக்குள் முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்திடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

வாராக்கடன் உள்ளிட்ட பல் வேறு பிரச்சினைகளால் பொதுத் துறை வங்கிகள் நிதி நெருக்கடியில் இருப்பதால் வங்கிகளின் அன்றாட பணிகளுக்காக மூலதனம் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதத் தில் ரூ. 2.11 லட்சம் கோடி மூலதனம் பொதுத்துறை வங்கிகளுக்கு வழங் கப்படும் என அறிவித்தது. அதன் படி ஏற்கெனவே முதல்கட்டமாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் 5 பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.11,336 கோடி வழங்கியது. இதில் நீரவ் மோடி மோசடியால் பாதிக்கப் பட்ட பிஎன்பி வங்கிக்கு அதிகபட்ச மாக ரூ.2,816 கோடி வழங்கியது.

இந்நிலையில் தற்போது இரண் டாம் கட்ட மூலதனம் இந்த மாத இறுதிக்குள் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டாம் கட்ட மூலதனம் ரூ. 54 ஆயிரம் கோடி ஆகும்.

இந்த மூலதனத்தைப் பயன் படுத்தி பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்கலை அதிகப்படுத்த உள்ளன. குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்களை வழங்க உள்ளன.

சமீபத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்க ளின் வளர்ச்சிக்காக 59 நிமிடங் களில் ரூ. 1 கோடி வரையிலான கடன் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தும் வகையில், இந்த மூலதனம் வழங்க உள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் செப் டம்பர் காலாண்டு முடிவுகள் வெளி யாகியுள்ள நிலையில், அவற்றின் நிதிநிலையைப் பொறுத்து அவற் றுக்கான மூலதன தேவையை நிதி அமைச்சகம் இந்த மாத இறுதிக் குள் முடிவு செய்ய உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x