

வளர்ச்சியடைந்த ஜி-20 நாடுகளி டையே சமீப காலமாக வர்த்தக கட் டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரித் துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) குறிப்பிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இறக்குமதி கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதாக அது சுட்டிக் காட்டியுள்ளது.
இது தொடர்பாக டபிள்யூடிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் இது வரை 40 வர்த்தக கட்டுப்பாட்டு விதி கள் போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள் ளது. குறிப்பாக மே மாதம் முதல் அக் டோபர் மாதம் வரையான காலத்தில் வரி விதிப்பு, இறக்குமதி தடை, ஏற்றுமதி வரி உயர்வு உள்ளிட்ட நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி கணக்கிட்டால் குறைந் தது ஒரு மாதத்துக்கு 8 கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள் ளன. இதற்கு முந்தைய காலத்தில் (2017 மே-அக்டோபர்) ஒரு மாதத் துக்கு 6 என்ற வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக டபிள்யூடிஓ குறிப்பிடுகிறது.
சமீபகாலமாக போடப்படும் வர்த் தகக் கட்டுப்பாடுகளால் 48,000 கோடி டாலர் மதிப்பிலான வர்த்த கம் பாதிக்கப்பட்டுள்ளதாக டபிள்யூ டிஓ இயக்குநர் ஜெனரல் ராபர்டோ அஸெவெடோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆய்வறிக்கை ஜி-20 நாடுகளின் அரசுகளுக்கு மிக முக்கியமான தகவலாக இருப்ப தோடு எந்த அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. என்பதை உணர்த்தும் என்று அஸெவெடோ குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் வர்த்தக கட்டுப்பாடு என்பது மிகப் பெரும் சவாலாக உருவெடுத்து வரு வதையும் அவர் ஒப்புக் கொண்டார்.
இதேநிலை தொடரும்பட்சத்தில் பொருளாதாரம் சார்ந்த விளைவு களும் அதிகரிக்கும். குறிப்பாக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நுகர் பொருள் விலை உயர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் உலகம் முழுவதும் நிக ழும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண டபிள்யூடிஓ தயாராக உள் ளது. ஆனால் தீர்வுகளை அந்நாடு களின் தலைவர்கள்தான் காண வேண்டும் என்றார்.