

நாட்டின் பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எப்-பின் நிகர கடன் 2014-ம் ஆண்டு ஜூனுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ. 538 கோடி அதிகரித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் நிகர கடன் ரூ. 19,064 கோடியாக உள்ளது.
வியாழக்கிழமை வெளியிடப் பட்ட அறிக்கையின்படி, டிஎல்எப் நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு நிகர லாபம் 29 சதவீதம் குறைந்து, ரூ. 127.77 கோடியாக இருந்தது. நிலங்கள் விற்பனை மூலம், நிகர கடன் அளவை ரூ. 500 கோடி அதிகம்/குறைவு என்ற அளவிலேயே வைத்திருக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாக டிஎல்எப் தெரிவித்துள்ளது. மேலும், வர்த்தக ரீதியான அடமானக் கடன்களில் (சிஎம்பிஎஸ்) கவனம் செலுத்தப் போவதாகவும் அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.