ஸ்டார்ட் அப் ஹப்: இந்தியாவுடன் ஸ்லோவோகியா கூட்டு

ஸ்டார்ட் அப் ஹப்: இந்தியாவுடன் ஸ்லோவோகியா கூட்டு
Updated on
1 min read

இந்தியாவுடன் இணைந்து ஸ்டார்ட் அப்களை உருவாக்குவதற்கு ஸ்லோவேகிய அரசு முன்வந்துள்ளது. ஸ்டார்ட் அப் ஹப் என்ற பெயரிலமையும் இந்த கூட்டுறவு மூலம் ஸ்டார்ட் அப்களை மேம் படுத்துவது, நெட்வொர்கிங், ஊக்கு விப்பு மற்றும் தேவையான நிதி உதவிகளை அளிப்பது இதன் முக்கிய பணியாகும்.

இந்திய தொழில் வர்த்தக சபை இரு நாடுகளிடையி லான வர்த்தக உறவை மேம்படுத் தும் நடவடிக்கைகளை மேற் கொள்ளும். கடந்த ஓராண்டில் ஸ்லோவோகிய அரசு 90 ஸ்டார்ட் அப் மூலம் 4.84 கோடி டாலர் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டை ஸ்லோவோகியாவின் இந்திய தூதர் இவான் லான் கேரியாக் தொடங்கி வைத்தார். ஸ்லோவோகிய ஸ்டார்ட் அப் ஹப் மூலம் புதிய மற்றும் பிரத்யேக மான, புத்தாக்க சிந்தனையிலான ஸ்டார்ட் அப்கள் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நுகர்வு கலாசாரம் அதி கரிப்பு, இணையதள உபயோ கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங் களால் ஸ்டார்ட் அப்களுக்கான முதலீடு அதிகரித்துவருகிறது. சுற்றுலாத்துறை தொழில்நுட்ப வாய்ப்புகளை மிகச் சரியாக பயன்படுத்தி முன்னேறி வருகிறது என்று பிவிகே குழுமத் தலைவர் பாலா வி. குட்டி தெரிவித்தார். டிஜிட் டல் பேமென்ட் மட்டுமே முதலீட் டாளர்களை ஈர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிதித்துறை, மரபு சாரா எரிசக்தி, உரம் சேர்க்காத வேளாண் பொருள், ரியல் எஸ்டேட், குளிர் பதனம், உயிரி தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா துறைகளில் சர்வதேச சந்தைகள் உள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட் டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in