

இந்தியாவில் 1970-களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் மனதை கவர்ந்த வாகனங்களில் முக்கியமானது ஜாவா. சீறிப் பாயும் ஜாவாவுக்கு என ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால் பிற்காலத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
இப்போது மீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கிறது.
புதிய ஜாவா மோட்டார் சைக்கிளில் 293 சி.சி. திறன் இன்ஜினுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 27 பிஎச்பி திறவுடன், பியூயல் இன்ஜக்ஷன் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது.
புதிய மோட்டார்சைக்கிளின் 293சிசி இன்ஜினுடன் 6 கியர்கள் கொண்டதாகவும் உள்ளது. நவம்பர் 15-ம் தேதியான இன்று ஜாவா மோட்டர் சைக்களில் அறிமுகமாகிறது. அதன் பிறகே அதன் விலையும் தெரிய வரும். இருப்பினும் 1.5 லட்சம் முதல் 1.7 லட்சம் வரை அதன் விலை இருக்கலாம் என கருதப்படுகிறது.