

கடலுக்கடியில் சீனா தனது முதல் அதிவேக ரயில் திட்டத்தைச் செயல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான சுரங்கம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷெஜியாங் மாகாணத்தில் அதிவேக ரயில் பாதை அமைக்க உள்ளது. நிங்போ முதல் சவ் ஷான் வரை 70 கிமீ தொலை வுக்குச் செல்லும் அதிவேக ரயில் திட்டத்தில் 16.2 கிமீ தொலை வுக்கு கடலுக்கடியில் செல்லும் ரயில் பாதையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது சீனா கட லுக்கடியில் அமைக்கும் முதல் ரயில் பாதை ஆகும்.
இந்த அதிவேக ரயில் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. சாதாரணமாக ஒன்றரை மணி நேரம் ஆகும் பயணம் இதன் மூலம் அரை மணி நேரமாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மொத்த அதிவேக ரயில் பாதைகளில் 60 சதவீதம் சீனாவில் உள்ளது. இது சுமார் 25 ஆயிரம் கிமீ ஆகும்.