

இவி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தி யா முழுவதும் ரூ. 1,400 கோடி முதலீட்டில் 6,500 சார்ஜிங் நிலையங் களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாக னப் பயன்பாட்டை அதிகரிக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அரசு அறிவித்தது. ஆனால், இதற்கு தேவையான அளவில் தேவையான இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் இருக்க வேண்டியது அவசியம். இது பெரும் சவாலாக இருந்துவந்தது.
இந்நிலையில் இந்தியா முழு வதும் அடுத்த 5 வருடங்களில் ரூ. 1,400 கோடி முதலீட்டில் 6,500 சார்ஜிங் நிலையங்களை அமைக் கும் திட்டத்தைக் கையில் எடுத்துள் ளது இவி மோட்டார்ஸ் நிறுவ னம்.
டிஎல்எப், ஏபிபி உள்ளிட்ட நிறு வனங்களுடன் இணைந்து இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக் கிறது. இதற்கு PlugNgo என்று பெயரிட்டுள்ளது.
இதுகுறித்து இவி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநர் வினித் பன்சால் “இந்தியாவின் எலெக்ட்ரிக் வாக னப் பயன்பாட்டின் இலக்கு இதன் மூலம் எட்டப்படும். அடுத்த ஒரு வருடத்தில் டெல்லியில் 20 நிலையங்களை அமைக்க உள்ளோம். அதைத்தொடர்ந்து பிற நகரங்களில் பணிகள் நடைபெறும்” என்று கூறினார்.