Published : 20 Nov 2018 10:25 AM
Last Updated : 20 Nov 2018 10:25 AM

9 மணி நேர விவாதத்துக்குப் பிறகு மத்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றது ஆர்பிஐ

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப் பட்ட ரிசர்வ் வங்கியின் கூட்டம் ஏறக் குறைய 9 மணி நேரம் நடை பெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் சில முக்கிய பிரச்சினைகளுக்கு முடிவுகள் எட்டப்பட்டன.

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இக்கூட் டம் நடைபெற்றது. மொத்தம் 18 இயக்குநர் குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் 5 பேர் ரிசர்வ் வங்கியைச் சேர்ந் தவர்கள், இருவர் அரசு அதிகாரி கள், நான்கு பேர் ஆர்பிஐயின் பிராந்திய பிரதிநிதிகள், 7 பேர் பொறுப்புகள் ஏதும் இல்லாத சுயேச் சையான இயக்குநர்களாவர். இவர் கள் அனைவரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்களாவர்.

இந்தக் கூட்டத்தில் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து ரிசர்வ் வங்கி யின் கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்வார் என்ற யூகங்கள் எழுந்தன. ஆனால் அவ்விதம் ஏதும் நடைபெறாமல் ஓரளவு சுமுகமாகவே பிரச்சினை களுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.

ஆனால் கூட்டம் ஆரம்பமான உடனேயே துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா சமீபத்தில் தெரிவித்த கருத்து பிரதான விவாதப் பொரு ளாக இருந்தது.

ரிசர்வ் வங்கியிடம் உள்ள இருப் புத் தொகையான ரூ. 9.6 லட்சம் கோடியில் ஒரு பகுதியளவை அரசுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆராய ஒரு சிறப்பு குழுவை ஆர்பிஐ நிய மித்துள்ளது. இக்குழுவின் பரிந்துரைப்படி முடிவு செய்ய இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இருப்பில் அன் னியச் செலாவணி மற்றும் தங்கம் கையிருப்பும் அடங்கும். இது மொத்த நிதியில் 28 சதவீதமாகும். ஆனால் மத்திய அரசு இவ்விதம் வைத்துள்ள கையிருப்பு தொகை 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருந்தால் போதும் என கருது கிறது. சர்வதேச அளவில் இதுதான் நடைமுறையாக பின்பற்றப்படு கிறது என அரசு கருத்து தெரிவித்துள்ளது.

வங்கியல்லாத நிதி நிறுவனங் களான என்பிஎப்சி-க்களுக்கு நிதி தாராளமாக கிடைக்க செய்ய வேண் டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. போதிய நிதி புழக்கம் இல்லாத காரணத்தால் ஐஎல் அண்ட் எப்எஸ் திவாலானதாக கருதுகிறது. எனவே பணப் புழக்கத்தை எளிதாக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டது.

இதேபோல சிறு, குறு தொழில் களுக்கு நிதி உதவி கிடைப்பதற்கு விதிமுறைகளைத் தளர்த்த வேண் டும் என்பதும் பிரதான கோரிக்கை களில் ஒன்றாகும்.

வங்கிகளின் வாராக்கடன் நட வடிக்கை காரணமாக மேற்கொள் ளப்பட்ட பிசிஏ எனப்படும் கடன் வழங்கு கொள்கையை தளர்த்த வேண்டும் என்பதும் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் பணப் புழக்க சூழலை உருவாக்க வேண் டும் என்பதும் அரசின் பிரதான எதிர் பார்ப்பாகும்.

ரிசர்வ் வங்கி எந்த அளவுக்கு கையிருப்பை வைத்துக் கொள்ள லாம் என்பதற்கு உரிய வழிகாட்டு தலை உருவாக்கவேண்டும் என் பதும் இன்றைய விவாதப் பொரு ளில் முக்கிய விஷயமாகும்.

அரசின் பெரும்பாலான எதிர் பார்ப்புகளுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு உள்ள நெருக்கடி களைத் தளர்த்துவது, சிறு, குறு தொழில்களுக்கு நிதி உதவி கிடைக் கும் வகையில் விதிமுறைகளைத் தளர்த்துவது, பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவது உள்ளிட்டவற் றுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண் டுள்ளது. எம்எஸ்எம்இ துறைக்கு ரூ. 25 கோடி வரை கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

டிசம்பர் 14ம் தேதி அடுத்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அப்போது பணப் புழக்கம் மற்றும் நிர்வாக விவகா ரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x