Published : 28 Nov 2018 10:37 AM
Last Updated : 28 Nov 2018 10:37 AM

ஜிஎம் நிறுவனம் சீனாவில் உற்பத்தியை நிறுத்த வேண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

சர்வதேச வாகன உற்பத்தி நிறுவனமான ஜென்ரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) நிறுவனம் சீனாவில் தனது உற்பத்தியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

இந்த முடிவினால் அமெரிக் காவின் ஓஹியோ, மிச்சிகன் மாகாணங்களின் வேலைவாய்ப்பு களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியான தகவல்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க நிறுவனமான ஜென்ரல் மோட்டார்ஸ் சீனாவில் உற்பத்தியை நிறுத்த வேண்டும். இதனால் அமெரிக்க வேலைவாய்ப்பில் மாற்றங்கள் ஏற்படும் என்றார். அமெரிக்காவில் உள்ள வாகன உற்பத்தி நிறு வனங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 14,800 வேலை வாய்ப்புகளை குறைக்க உள்ள தாக அறிவித்தன. இதன் காரணமாக அதிபர் ட்ரம்ப் இந்த கோரிக்கையினை வைத்துள்ளார்.

குறிப்பாக ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த முடிவினை மேற் கொள்ள வேண்டும் ட்ரம்ப் வலியுறுத் தியுள்ளார். செலவு குறைப்பு காரணமாக ஜெனரல் மோட் டார்ஸ் நிறுவனத்துக்கு சுமார் 450 கோடி டாலர் வரை 2020-ம் ஆண்டுக்குள் செலவுகள் குறையும். இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டால் அமெரிக்கா வின் ஆட்டோமொபைல் துறை யில் முக்கிய மாகாணங்களான ஓஹியோ, மிச்சிகன் மாகாணங் களின் வேலைவாய்ப்பில் தாக்கங் கள் ஏற்படும்.

இது தொடர்பாக ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை அதிபர் ட்ரம்ப் சந்தித்துள்ளார் என வால்ஸ்ட்ரீட் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவில் கார் உற்பத்தியை நிறுத்த வேண்டும். மேலும் ஓஹியோ மாகாணத்தில் மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். புதிதாக இன்னொரு ஆலையை திறக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த செய்தி கூறியுள்ளது.

சீனாவில் ஆலையை மூடிவிட்டு, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அமெரிக்காவில் ஆலையை திறக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ஜிஎம் நிறுவனத்தின் தலைமை யுடன் பேசியது குறித்த கேள்விக்கு, நான் ஓஹியோ மாகாணத்தை விரும்புகிறேன். நீங்கள் சர்வதேச நிறுவனமான இருக்கலாம். ஆனால் தவறான நபர்களுடன் சேர வேண்டாம் என்று குறிப்பிட்டேன் என்று கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் அளித்த செய்தி யில், ஜென்ரல் மோட்டார்ஸ் நிறு வனத்தின் முடிவு விரும்பத்தக்கது அல்ல என்று கூறியிருந்தார்.

சீனாவில் ஆலை செயல் படுவதை நான் விரும்பவில்லை. இங்கு மிக விரைவாக ஆலையை தொடங்கவும் என்று கூறியுள்ளேன்.

ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை அமெரிக்கா இழக்கிறது. அதனால் திரும்பவும் விரைவில் வரவும், ஓஹியோ மாகாணத்தை திரும்ப மிகச் சிறந்த மாகாணமாக்குங்கள் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x