

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொகையை அளிப்பது தொடர் பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் அதாவது 5 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தனது வருவாயில் 75 சதவீத தொகையை அரசுக்கு அளித்துள்ளது. ஆர்பிஐ அளித்த மொத்த தொகை ரூ. 2.5 லட்சம் கோடியாகும்.
கடந்த நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி யின் வருவாய் குறித்து தணிக்கை செய்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி 2013-14ம் நிதி ஆண்டு முதல் 2017-18-ம் நிதி ஆண்டு வரையான காலத்தில் ரிசர்வ் வங்கி ஈட்டிய வருவாய் ரூ. 3.3 லட்சம் கோடி என குறிப்பிட் டுள்ளது. இதில் ரூ. 2.48 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. இதில் 2015 -16-ம் நிதி ஆண்டில் மிக அதிகபட் சமாக 83 சதவீத தொகை வழங்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும் கூடுதலாக நிதியை அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நெருக்குதல் தருவதாக தகவல் வெளியானது. பொருளாதார ஆய் வறிக்கையும் மற்ற நாடுகளில் உள்ள மத்திய வங்கி வைத்துள்ள இருப்புத் தொகையை விட ரிசர்வ் வங்கி கூடுதலாக வைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. கடந்த காலங்க ளில் ரிசர்வ் வங்கி ரூ. 65 ஆயிரம் கோடி வரை உபரி நிதியை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. 2017-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் செல வின் அதிகரித்தது. இதற்கு முக்கிய காரணம் அதிக அளவில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.