Published : 24 Nov 2018 09:39 AM
Last Updated : 24 Nov 2018 09:39 AM

ஒரே நாளில் 6 லட்சம் போன்கள் விற்பனை: ரெட்மி நோட் 6 புரோ சாதனை

ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 புரோ அறிமுகம் செய்யப் பட்டு முதல் நாளன்றே 6 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ளது.

சீன நிறுவனமான ஜியோமியின் மொபைல் போன் பிராண்டான ரெட்மி 22ம் தேதி தனது புதிய நோட் 6 புரோ போனை அறிமுகம் செய் தது. குவாட் கேமரா ஆல் ரவுண்டர் என்று அழைக்கப்பட்ட இந்த நோட் 6 புரோ 4ஜிபி, 6ஜிபி ரேம் மெமரி யுடன் முறையே ரூ.13,999, ரூ.15,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுக சலுகையாக வெள்ளிக் கிழமை அன்று பிளிப்கார்ட் மற் றும் எம் டாட்காம் உள்ளிட்ட ஆன் லைன் விற்பனை தளங்களில் ‘பிளாக் ஃப்ரைடே விற்பனை’ மூலம் ரூ. 1000 ஆஃபர் அளிப்பதாகவும் அறிவித்தது.

இந்த ஆஃபரில் வெள்ளிக் கிழமை ஒரே நாளில் 6 லட்சம் ரெட்மி நோட் 6 புரோ போன்கள் விற்று சாதனை படைத்துள்ளன. இதுகுறித்து ஜியோமி இந்தியாவி ன் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டர் பதிவில், “எம்ஐ போன் ரசிகர்களால் ரெட்மி நோட் 6 புரோ முதல் நாளிலேயே 6 லட்சம் போன்கள் விற்றுள்ளது. அதுவும் விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஸ்டாக்குகள் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x