Published : 21 Nov 2018 10:33 AM
Last Updated : 21 Nov 2018 10:33 AM

சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் வர்த்தக மாநாடு

இந்திய சில்லரை விற்பனை யாளர்கள் சங்கம் (ராய்) சார்பில், 8-வது சென்னை சில்லரை வர்த் தக மாநாடு சென்னையில் நடை பெற்றது.

இதில், இந்திய சில்லரை விற் பனையாளர்கள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன் பேசும்போது, தென் னிந்தியாவில் சில்லரை விற்பனை யின் முக்கியத்துவம் குறித்து விவா திப்பதற்காக இந்த மாநாடு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

சில்லரை வர்த்தக வளர்ச்சி, இடங்கள் மற்றும் வழிகள் என் பது இந்த மாநாட்டின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. நுகர் வோர்கள் இன்று எளிதாக ஆன் லைன் மூலம் அதிகளவு பொருட் களை வாங்குகின்றனர். சில வாடிக் கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் பொருட்கள் குறித்து ஆன்லைன் மூலம் கண்டறிந்து, மதிப்பாய்வு செய்து விட்டு அதைக் கடைகளில் வாங்குகின்ற னர்.

இன்னும் சில வாடிக்கையாளர் கள் சில பொருட்கள் குறித்து சமூகவலைதளங்களில் கருத்தைக் கேட்டறிந்த பிறகு அதை ஆன்லைன் மூலம் வாங்குகின்றனர். எனவே, சில்லரை விற்பனையாளர்கள் சரியான இடங்கள் மற்றும் வழி முறைகளை கண்டறிந்து வியா பாரம் செய்ய வேண்டும் இந்த மாநாடு சில்லரை விற்பனை யாளர்கள், தொழில்துறையினரை ஒரே இடத்துக்கு கொண்டு வந்து விவாதித்து தங்கள் வர்த்தகத்தை மேலும் வளர்ச்சியடைய பேருதவி யாக இருக்கும் என்றார்.

மாநாட்டில் சிறப்புரையாற்றிய ராம்ராஜ் குழும நிறுவனத்தின் நிறு வனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாக ராஜன் தனது உரையில், நான் ஒரு முறை வேட்டி அணிந்து நட்சத் திர ஓட்டலுக்குச் சென்ற போது உள்ளே விட மறுத்தனர். அதன் பிறகு, வேட்டி மீது அனைவருக்கும் மரியாதையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சல்யூட் ராம்ராஜ் என்ற விளம்பர பிரச்சாரத்தை மேற் கொண்டேன். அந்த விளம்பர படத்தை அனுமதி மறுக்கப்பட்ட அதே ஓட்டலில் வைத்து படம் பிடித்தேன்.

இந்தக் கதை அனைத்து தொழில்முனைவோருக்கும் ஒரு உத்வேகம் அளிக்கும். இன்று வேட்டிக்கு தனி மரியாதையும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இன்று எங்க ளது நிறுவனத்துக்கு 125 கிளை கள் உள்ளன.

குறிப்பாக, வேட்டிக் கென பிரத்யேக ஷோரூம்கள் வௌி நாடுகளில் அமைத்துள்ளோம். ஒரு வியாபாரத்தைத் தொடங்கு வதற்கு முன்பாக சந்தையைக் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நெறிகளை பின்பற்ற வேண்டும். இதைப் பின்பற்றினால் வியாபாரத் தில் வெற்றி பெறலாம் என்றார்.

மாநாட்டில் நடைபெற்ற குழு விவாதத்தில் பங்கேற்று பேசியவர் கள், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் தங்களது வியா பாரத்தை விரிவாக்கம் செய்ய இருப் பதாகவும், மொத்த வியாபாரத்தில் ஆன்லைன் மூலம் நடைபெறும் விற்பனை 15 சதவீதமாக உள்ளது எனவும் தெரிவித்தனர்.

மாநாட்டில், முன்னணி சில் லறை வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் பங்கேற்று பேசினர்.ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக சந்தையைக் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். நெறிகளை பின்பற்ற வேண்டும். இதைப் பின்பற்றினால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x