Published : 18 Nov 2018 08:56 AM
Last Updated : 18 Nov 2018 08:56 AM

ஃபேஸ்புக் நிறுவனர், சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக வலியுறுத்தல்: முதலீட்டாளர்கள் வற்புறுத்தலால் பங்கு விலை சரிவு

ஃபேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரும் அதன் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று நிறுவன முதலீட் டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் குடியரசு கட்சிக்கு சொந்தமான மக்கள் தொடர்பு அரசியல் ஆலோசனை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி எதிரிகள் மீது அவதூறுகளை பரப்பியதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புலனாய்வு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்தே மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நெருக் கடி அளித்துள்ளனர்.

டிரிலியம் அசெட் மேனெஜ்மென்ட் என்ற நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஜோனஸ் குரோன், இது தொடர்பாக கார்டி யன் பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கையில் மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தில் கணிசமான அளவு முதலீடுகளை செய்திருப்பது குறிப் பிடத்தக்கது.

செடியின் மீது படர்ந்துள்ள பனித்துளி போன்று ஃபேஸ்புக் நிறுவன செயல்பாடுகள் உள்ளன. ஆனால் அது ஒரு நிறுவனம். நிறு வனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கும் நிறுவனத்துக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்றும் ஜோனஸ் குரோன் வலியுறுத் தியுள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனம் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மக்கள் தொடர்புத் துறை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி அதன் மூலம் நிறுவனத்தின் எதிராளிகள் மற்றும் விமர்சகர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுவ தற்கு பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜூகர்பெர்க் மறுப்பு

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஜூகர்பெர்க், இந்த நிறுவனம் குறித்து தனக்கு எவ்வித முன்தகவலும் தெரியாது என்று கூறினார்.

நியூயார்க் டைம்ஸில் செய்தி வெளி யானதைப் படித்த உடனேயே இது குறித்து எனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தி குறிப்பிட்ட நிறுவனத்துடன் எதிர்காலத்தில் எவ்வித செயல்பாடுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என கூறியதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்நிறுவனமோ ஃபேஸ்புக் நிறு வனத்தின் போட்டி நிறுவனங்கள் குறித்து கடுமையாக விமர்சித்து செய்தி கட்டுரை களை வெளியிட்டிருந்தது.

நிறுவன ரீதியாக இதுபோன்ற சவால் களை எதிர்கொண்டிருந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இதைத்தான் ஒரு நிறுவனத்தின் தலைவர் செய்திருக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு முதலீட்டாளரான நடாஷா லாம்ப் கருத்துதெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை ஃபேஸ்புக் நிறுவன தலைமைச்செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) ஷெரில் ஷாண்ட்பெர்க் மறுத்துள்ளார். குறிப் பிட்ட நிறுவனத்தின் செயல்பாடுகள் தங்க ளுக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஃபிரீடம் பிரம் ஃபேஸ்புக் என்ற பிரசா ரத்தை செய்வதற்கு டிஃபைனர்ஸ் பப்ளிக் அபேர் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டது. இது நிறுவனத்தின் அடிப்படையிலிருந்து வளர்ந்த விதத்தை வெளிப்படுத்தும் பிரசாரமாகும். இந்த பிரசாரத்தில் மிகவும் பிரபலமான விமர்சகர் ஜார்ஜ் சோரோஸ் பயன்படுத்தப் பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது நிறுவனத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை. செய்தியில் குறிப்பிட்டுள்ள தகவல் உண்மை அல்ல என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x