

தகவல் தொழில்நுட்ப நிறுவனங் கள், சமூக வலைதள நிறுவனங்கள் தனிநபர்களின் விவரங்களைப் பாதுகாக்க புதிய ஒழுங்குமுறை விதிமுறைகள் வகுக்கப்பட வேண் டியது தவிர்க்க முடியாதது என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டிம் குக் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனமும் கேம்ப் ரிட்ஜ் அனாலிட்டிக்கா கன்சல் டன்சி நிறுவனமும் சேர்ந்து பல லட்சக்கணக்கான ஃபேஸ்புக் பய னாளர்களின் விவரங்களை வெளி யிட்ட விவகாரம் பெரும் சர்ச் சையைக் கிளப்பியது. ஃபேஸ்புக் பயனாளர்களின் இந்த விவரங்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் முறைகேடுகளை நடத்த உதவியிருப்பதாகக் குற்றச்சாட்டு கள் எழுந்தன. பின்னர் ஃபேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அவரும் பயனாளர்களின் விவரங் களைப் பாதுகாப்பதில் ஃபேஸ்புக் எப்போதுமே கறாராக இருந்துள் ளது என்று கூறினார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஃபேஸ்புக் நிறுவனர் சிஇஓ மார்க் ஜூகர்பர்க் மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, ஃபேஸ்புக் நிறுவன முதலீட்டாளர்களே அவரைப் பதவி விலகக் கோரி போர்க்கொடி தூக்கினர்.
இதுபோன்ற தனிநபர் தகவல் வெளியிடல், தகவல் திருட்டு உள்ளிட்ட விவகாரங்கள் சர்வதேச அளவில் அரசியல் ரீதியாகவும், சமூகப் பொருளாதார ரீதியாகவும் பெரும் விவாதங்களைக் கிளப்பி யிருக்கின்றன. இது குறித்து ஆங் கில இணையதளம் ஒன்றுக்கு ஆப்பிள் நிறுவன சிஇஓ அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
தனக்கு ஒழுங்குமுறை நடவடிக் கைகளில் விருப்பம் இல்லை யென்றாலும் சமீப காலங்களில் நடந்த தொழில்நுட்ப முறைகேடு களால் தகவல் தொழில்நுட்ப நிறு வனங்கள் மற்றும் சமூக வலை தளங்கள் ஆகியவற்றில் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கும் வகை யிலான ஒழுங்குமுறை நடவடிக் கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் இந்த விவ காரத்தை முன்னெடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “பொதுவாக, நான் ஒழுங்குமுறை நடவடிக்கை களுக்கு ஆதரவளிப்பவன் அல்ல. எனக்கு திறந்த சந்தையின் மீது தான் பெரிய நம்பிக்கை உண்டு. ஆனால், திறந்த சந்தை என்பது பல வகைகளில் சிக்கலானது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.
பல்வேறு விவகாரங்களில் அதன் விளைவைப் பார்க்க முடிந் தது. எனவே ஒழுங்குமுறை நட வடிக்கைகள் குறிப்பிட்ட அளவு கோலில் எடுக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததாக இருக்கிறது” என்றார்.