

ஓபிசி லாபம் 3% உயர்வு
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 3.15 சதவீதம் உயர்ந்து ரூ.364 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 353 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.5,255 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது 5,576 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
இதர வருமானம் 9.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.538 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.588 கோடியாக இருக்கிறது. வங்கியின் மொத்த வாராக்கடன் 4.33 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 3.11 சதவீதமாகவும் இருக்கிறது.
மாரிகோ நிகர லாபம் ரூ.185 கோடி
எப்எம்சிஜி நிறுவனமான மாரிகோவின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 185 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 157 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் நிகர விற்பனையும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 1,379 கோடி ரூபாயாக இருந்த நிகர விற்பனை இப்போது உயர்ந்து 1,619 கோடியாக இருக்கிறது. நிறுவனத்தின் காயா பிஸினஸ் பிரிவை கடந்த அக்டோபரில் பிரித்து விட்டதால் நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தை கடந்த ஆண்டு முடிவுகளுடன் ஒப்பிட முடியாது என்று மாரிகோ தெரிவித்திருக்கிறது. கடந்த வருடம் ரூ.1,173 கோடியாக இருந்த செலவுகள் இப்போது 1,376 கோடியாக அதிகரித்திருக்கிறது.