Published : 31 Oct 2018 08:43 AM
Last Updated : 31 Oct 2018 08:43 AM

’டெய்லர், மளிகைக் கடைக்காரருக்கும் வீட்டுக் கடன் வழங்குவதே நோக்கம்’

பொதுவாக வீடு வாங்குவது அனைவருக்கும் ஒரு கனவுதான். பலருக்கு அது வெறும் கனவா கவே போய்விடுகிறது. சிலருக்கு அது கைகூடுகிறது. தற்போது வங்கிகள், நிதி நிறுவனங்கள் அதிக அளவில் வீட்டுக் கடன் வழங்க முன்வந்துள்ளதால் சொந்த வீடு வாங்குவது எளிதாகியுள்ளது. ஆனாலும் இன்னமும் பலர் வாடகை வீட்டில் வாழும் நிலைதான் நீடிக்கிறது. இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள சாஸ்விதா ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம். பாலசந்திரனை நேரில் சந்தித்தோம். பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்தவர், நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைவராக பணியாற்றியவர், ஸ்டார் டாய்ச்சி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி தற்போது இந்நிறுவனத் தின் 8 மேம்பாட்டாளர்களில் ஒருவராகவும் உள்ளார். அவருடன் உரையாடியதிலிருந்து…

வீட்டுக் கடன் வழங்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், எல்ஐசி ஹவுசிங் உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்துமே நகர்ப்புற, மேல்தட்டு மக்களை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.

மாத சம்பளம் பெறுவோர், வருமான வரி தாக்கல் செய்தவர் கள் என குறிப்பிட்ட பிரிவினருக்குத் தான் இந்த நிதி அமைப்புகளில் வீட்டுக் கடன் கிடைக்கிறது.

ஆனால் இந்தியாவில் முறை சாரா தொழில் புரிவோர் எண்ணிக்கை 80 சதவீதமாகும்.

விவசாயிகள், மளிகைக் கடை நடத்துவோர், ஆட்டோ ஓட்டுநர், டெய்லர், கோவில் குருக்கள் போன் றோருக்கு பணத்தை திரும்ப செலுத் தும் சக்தியிருந்தும் வீட்டுக்கடன் கிடைப்பதில்லை.எங்களது நோக் கமே இதுபோன்ற தொழில் புரிவோ ருக்கு கடன் வழங்குவதுதான்.

நிறுவனம் இப்போது தொடங்கப் பட்டது என்றாலும் முதலாண்டில் ரூ. 100 கோடி வரை கடன் அளிக்க திட்டமிட்டுள்ளோம். 6 மாதங்களில் 10 கிளைகளைத் தொடங்குவதோடு 5 ஆண்டுகளில் 50 கிளைகளைக் கொண்ட நிறுவனமாக இதை செயல்படுத்துவதே நோக்கம்.

புதிதாக வீடு கட்டுவது, அடுக்கு மாடிக் குடியிருப்பு வாங்க கடன் வழங்குவது பிரதானமானது. அதே சமயம் சொத்துகளின் பேரில் கடன் அளிக்கவும்திட்டமிட்டுள் ளோம். வீட்டுக் கடன் பெறுவோர் அதிகபட்சம் இரண்டு முறைக்கு மேல் எங்கள் அலுவலகத்துக்கு வரவேண்டிய தேவை இருக்காது.

மதிப்பீடு செய்வது, சட்ட ரீதியான காகிதங்களை சரிபார்ப்பது உள் ளிட்ட அனைத்து பணிகளையும் நாங் களே மேற்கொண்டு விடுவோம்.

2022-ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீடு என்ற அரசின் இலக்கை எட்டுவதற்கு எங்களாலும் துணை புரிய முடியும் என்று நம்புகிறோம். அதேசமயம் அரசு அளிக்கும் மானிய உதவியை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத் தரும் நடவடிக்கையையும் எடுப்போம்.

புதிய கிளைகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே இருக்கும். வாடிக்கையா ளருக்கு கடன் அளிப்பதோடு காப்பீடு பெறுவது உள்ளிட்ட அம்சங்களை யும் கவனித்துக் கொள்வதால், வீட்டுக் கடன் பெற்றவருக்கு அசம்பா விதம் நிகழ்ந்தாலும், மற்ற உறுப்பி னர்களின் மீது கடன் சுமைவிழாது.

விளம்பரங்கள் மீது நம்பிக்கை யில்லை. மக்களின் வாய்மொழி பிரசாரமே எங்களுக்கு வாடிக்கை யாளர்களைப் பெற்றுத்தரும். ஒவ்வொருவருக்கும் வீடுதான் சாஸ்வதம். அதை அடைய உதவுவதற்காகவே நிறுவனத்திற் கும் சாஸ்விதா என பெயரிட்டுள் ளோம் என்றும் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x