ஜப்பானில் பேடிஎம்மின் பணமில்லா பரிவர்த்தனை சேவை சாப்ட்பேங்க், யாஹூவுடன் இணைந்து தொடங்கியது 

ஜப்பானில் பேடிஎம்மின் பணமில்லா பரிவர்த்தனை சேவை
சாப்ட்பேங்க், யாஹூவுடன் இணைந்து தொடங்கியது 
Updated on
1 min read

பேடிஎம் நிறுவனம் சாப்ட்பேங்க் மற்றும் யாஹூ ஜப்பான் ஆகிய வற்றுடன் இணைந்து ஜப்பானில் ‘பேபே’ என்ற பணமில்லா பரி வர்த்தனை சேவையைத் தொடங்கி யுள்ளது என நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் என்ற இந்திய நிறுவனத்தின் பணமில்லா பரிவர்த்தனை சேவை நிறுவனமான பேடிஎம், ஜப்பானிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இதற்காக சாப்ட்பேங்க் மற்றும் யாஹூ ஜப்பான் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ‘பேபே’ என்ற பெயரில் தொடங்கியுள்ளது.

சாப்ட்பேங்க் குழுமம் பேடிஎம் மில் பெருமளவிலான முதலீடு களைச் செய்துள்ள நிறுவனமா கும். ஏற்கெனவே பேடிஎம் நிறு வனத்தைப் பற்றி தெரிந்திருந்ததால் ஜப்பானில் பணமில்லா பரிவர்த் தனை சேவையைத் தொடங்கு வதில் தன்னையும் இணைத்துக் கொண்டது. இந்த பேபே கார்ப் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த சேவையை ஜப் பானில் வழங்க ஆரம்பித்துள்ளது.

மேலும் இந்த பேபே சேவை யில் இன்னொரு கூட்டாளியாக இணைந்துள்ள யாஹூ ஜப்பான் ஏற்கெனவே தான் வழங்கிவந்த யாஹூ வாலட் சேவையை நிறுத் திக்கொள்ள முடிவு செய்துள்ளது.

இந்த பேபே வாலட் சேவை க்யூஆர் கோடு மூலம் இயங்கக்கூடி யதாக உருவாக்கப்பட்டுள்ளது. பேபே செயலியைத் தரவிறக்கம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 500 யென் வழங்க பேடிஎம் திட்ட மிட்டுள்ளது. மேலும் பார்கோடு சேவைக்கு 2021 வரை எந்தக் கட்ட ணமும் வசூலிக்கப்போவதில்லை எனவும் முடிவுசெய்துள்ளது.

இதுகுறித்து பேபே கார்ப்ப ரேஷனின் சிஇஓ இசிரோ நகாயாமா கூறுகையில், “பேடிஎம்மின் அதி நவீன தொழில்நுட்பமும் தீர்வும் பேபே சேவைக்கு நல்ல வர வேற்பை பெற்றுத்தரும். இதன் மூலம் ஜப்பானில் பேபே வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயரும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in