Published : 21 Aug 2014 12:22 PM
Last Updated : 21 Aug 2014 12:22 PM

உலகின் டாப் 100 புத்தாக்க கம்பெனிகள் பட்டியலில் 5 இந்திய நிறுவனங்களுக்கு இடம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட 100 புத்தாக்க நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றன.

நியூயார்க்கில் புதன்கிழமை அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஆண்டுக்கான 'உலகின் 100 புத்தாக்க நிறுவனங்கள்' பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது.

புதிய உயரிய சிந்தனைகள் மற்றும் உயரிய வளர்ச்சியை ஏற்படுத்த வல்ல, உலகின் 100 புதுமை நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 5 நிறுவனங்களின் பெயர்கள் இடைபெற்றன.

அதில், நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் 14-வது இடத்தையும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 57- ஆவது இடத்தையும், கட்டுமான சேவை நிறுவனமான லார்சன் & டூப்ரோ 58- ஆவது இடத்தையும், மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் 65- ஆவது இடத்தையும், பஜாஜ் ஆட்டோ 96- ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்திய நிறுவனங்களிலேயே 54.7% என்ற மிக உயரிய அளவில், புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்ட பெருமையை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் பெற்றது.

மேலும், சர்வதேச அளவில், இந்த பட்டியலில் மிக அதிக இடங்களை அமெரிக்க நிறுவனங்கள் பெற்றன என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x