Published : 06 Oct 2018 08:57 AM
Last Updated : 06 Oct 2018 08:57 AM

ஆர்பிஐ வட்டிவிகித முடிவால் பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிவு

வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியானதால், பங் குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தை யின் குறியீடான சென்செக்ஸ் 792 புள்ளிகள் சரிந்து 34376 புள்ளிக ளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை யின் நிப்டி குறியீடு 282 புள்ளிகள் சரிந்து 10316 புள்ளிகளில் உள்ளது.

பங்குச் சந்தையின் சரிவு, தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. நேற்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவன பங்குகள் கடும் இழப்பை கண்டன. குறிப்பாக எரிபொருள் விலை லிட் டருக்கு ஒரு ரூபாய் குறைக்க வேண் டும் என எண்ணெய் நிறுவனங் களை மத்திய அரசு கேட்டுக் கொண் டுள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர்.

தவிர ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்பு இன்று வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்களிடத்தில் தாக் கத்தை ஏற்படுத்தியுள்ளது. 6.50 சத வீதமாக உள்ள வட்டி விகிதத் தில் மாற்றம் கொண்டு வருவதற் கான ஆலோசனைக்கு உறுப்பினர் களிடையே 5-1 என்கிற நிலை யில்தான் ஆதரவு இருந்தது. வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்கிற அறிவிப்பு வெளியானதை அடுத்து பங்குச் சந்தையின் சரிவு மேலும் அதிகரித்தது.

நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,760.63 கோடி முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,823 கோடிக்கு பங்குகளை வாங்கியுள் ளனர்.

சர்வதேச சந்தை நிலவரங் களைப் பொறுத்தவரையில், அமெரிக்க நிதிச் சந்தை பங்குகள் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக ஆதாயத்தை அளித்துள்ளன. இதனுடன் ஒப்பிடு கையில் ஆசியப் பங்குகளின் வர்த் தகம் சரிந்தே இருந்தன. மேலும் டாலரின் வர்த்தகம் மேலும் ஸ்திர மடைந்துள்ளது. தவிர நேற்றைய தினசரி வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து ரூ73.74 க்கு வர்த்தகமானது.

நிதிக்கொள்கை ஆய்வு

ரிசர்வ் வங்கியின் நேற்றைய நிதிக் கொள்கைக் கூட்டத்துக்கு பின்னர், வட்டி விகிதங்களில் எந்த மாற்றமுமில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்னர் உயர்த்தபட்ட வட்டி விகிதத்தினால் ஏற்பட்ட பயன்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர், தேவைக்கேற்ப உயர்த்தலாம் என முடிவு செய் துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில், வட்டி விகித்தினை உயர்த்த பெரும் பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.

தற்போதைய சந்தை நில வரத்தை கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டாம் என நான்கு உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச அளவில் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வர்த்தக உறவுகளில் குழப்பங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

சர்வதேச மற்றும் உள் நாட்டில் நிலவும் காரணிகளால் வளரும் நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் பெரும் நெருக் கடியை சந்தித்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் சீனா, ரஷியா, பிரேசில், தென் னாப்பிரிகா நாடுகளில் நிலவும் சூழல்களையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தற்போதுள்ள 6.50 சதவீத ரெபோ விகிதமே தொடரும். ஆனால் சந்தை வல்லுநர்கள் கூறுகையில்,

ரிசர்வ் வங்கியிடம் 0.25 % வட்டிக் குறைப்பு எதிர்பார்த்ததாகக் குறிப் பிட்டனர். நிதிக் கொள்கை குழு வின் அடுத்த கூட்டம் டிசம்பர் 3லிருந்து 5 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x