Published : 17 Oct 2018 12:05 PM
Last Updated : 17 Oct 2018 12:05 PM
சீனாவுக்காக தணிக்கை தேடு பொறியை கொண்டு செல்லும் முயற்சிகளில் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனா வில் கூகுளின் சந்தையை பரவ லாக்கும் முயற்சியின் ஒரு பகுதி யாகவும், ஆசிய சந்தைகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ள தாகவும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர்பிச்சை கூறினார்.
அமெரிக்காவில் நடைபெற்ற வயர்டு (Wired) இதழில் 25 வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி யில் சுந்தர்பிச்சை கலந்து கொண்டு பேசுகையில் இதனைத் தெரிவித் தார். அவர் மேலும் பேசியதாவது,
கூகுள் நிறுவனத்துக்கு சீனா முக்கியமான சந்தை. சீன அரசாங் கத்தின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப தேடுபொறியை வடிவமைக் கும் முயற்சிகளில் கூகுள் உள்ளது. பெய்ஜிங்கிற்காக ட்ராகன்ப்ளை (Dragonfly) என்கிற சிறப்பு குறி யீடுகளை கொண்ட தேடுபொறியை வடிவமைக்க உள்ளோம். இருக்கிற தகவல்களில் சிறந்தவற்றை அளிக்க கூகுள் திட்டமிடுகிறது என்றார்.
கூகுளிடமிருந்து சீனா என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு ஆர்வமாக உள் ளோம். ஆரம்ப நிலையில் என்ன எதிர்பார்க்கிறது, அல்லது எதை அளிப்பது என்பதை அறிந்து கொள் ளவில்லை. ஆனால் சீனா சந்தை எங்களுக்கு முக்கியம் என்பதை புரிந்து கொண்டுள்ளோம் என்றார்.
கூகுளின் டிராகன்பிளை திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப் பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளால் ஊழியர் களுக்கான கடுமையான நெருக்கடி யில் கூகுள் உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட இந்த தேடுபொறி திட் டத்துக்கு பலதரப்பினரும் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட விவரங் களை தேடும் பயனாளிகளின் விவ ரங்கள் மற்றும் அவர்களை எளிதாக கண்டறிவதற்கு அரசு, பாதுகாப்பு அமைப்புகளை அனுமதிக்கும் வகையில் இந்த தேடுபொறி இருக்கும்.