Published : 10 Oct 2018 08:37 AM
Last Updated : 10 Oct 2018 08:37 AM

அமெரிக்கவாழ் இந்தியர்களின் பெற்றோருக்கு கிரீன் கார்டு பெறுவதில் சிக்கல்

உயர் திறமையான வெளிநாட்டு பணியாளர்களுக்கு அமெரிக்க அரசு எச்1பி விசாவினை வழங்கு கிறது. இந்த விசாவை பெற்ற வெளிநாட்டினர், 6 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருந்து பணி யாற்ற முடியும். பெரும்பாலும் எச்1பி விசா முடிந்த பிறகு அமெரிக் காவின் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) கோரி வெளிநாட்டினர் விண்ணப்பிக்கின்றனர். கிரீன் கார்டு வரும் வரை ஆண்டுதோறும் எச்1பி விசாவை புதுப்பிக்கவும் வசதி உள்ளது.

இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு, கிரீன் கார்டு நடைமுறைகளைக் கடுமை யாக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான புதிய விதிகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இது விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

புதிய விதிகளின்படி கிரீன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்கள் 'ஐ-944' என்ற படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது விண்ணப்பதாரரின் வயது, ஆங்கில புலமை, நிதிநிலைமை, கல்வித் தகுதி, பணி விவரங்கள் அனைத் தும் ஆய்வு செய்யப்படும். அரசு நல உதவிகள் எதையும் கோர மாட்டோம் என்று விண்ணப்பதாரர் கள் உறுதியளிக்க வேண்டும். மேலும் கிரீன் கார்டு விண்ணப் பங்களை ஏற்கவும், நிராகரிக்கவும் குடியுரிமை அதிகாரிகளுக்கு கூடு தல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள் ளன.

சுமார் 6.3 லட்சம் இந்தியர் கள் கிரீன் கார்டு கோரி விண் ணப்பித்துள்ளனர். புதிய விதிகள் அமலுக்கு வந்தால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் கிரீன் கார்டு (நிரந்தர குடியுரிமை) பெற்றுள்ள இந்தியர்கள் தங்களின் கணவர், மனைவி, குழந்தைகள், பெற்றோ ருக்கு கிரீன் கார்டு கோரி விண் ணப்பிக்க முடியும். குறிப்பாக தாய், தந்தைக்கு கிரீன் கார்டு கோரும்போது அவர்களின் வாழ் வாதாரத்துக்கு (6 பேர் கொண்ட குடும்பம்) தலா ரூ.31.35 லட் சத்துக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும். புதிய விதி களின்படி தாய், தந்தையின் வாழ் வாதாரத்துக்கு ரூ.62.70 லட்சத்துக் கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும் 60 வயதுக்கு மேற் பட்டோர், ஆங்கில புலமை இன்மை, உடல்நல பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்க குடிமக்களின் பெற்றோரின் கிரீன் கார்டு விண்ணப்பங்களை நிராகரிக் கலாம் என்று புதிய விதியில் கூறப் பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள், தங்கள் பெற்றோருக்கு கிரீன் கார்டு பெறுவது குதிரை கொம்பாகிவிடும் என்று குடியுரிமை சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x