ஆண்டுக்கு ரூ. 1 கோடி வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு

ஆண்டுக்கு ரூ. 1 கோடி வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு
Updated on
1 min read

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வரிக் கணக்குத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டு களில் 60 சதவீதம் அதிகரித்து 1.40 லட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 68 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.கடந்த நான்கு வருடத்துக்கான வருமான வரி மற்றும் நேரடி வரி குறித்த புள்ளிவிவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள் ளது. இந்த அறிக்கையில் வரி செலுத்துவோர்களில் ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 60 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.2014-15 நிதி ஆண்டில் 88,649 பேர் ரூ. 1 கோடிக்கு மேல் வரு மானம் ஈட்டுவதாக வரிக் கணக்குத் தாக்கல் செய்துள்ளனர். இது 2017-18 நிதி ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது.

 இவர்களில் பெருநிறுவனங்கள், நிறுவனங்கள், குடும்பங்கள் என அனைத்தும் அடங்கும்.அதேபோல் தனிநபர்கள் பிரி வில் ரூ. 1 கோடிக்கும் மேல் வரு மானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை 68 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. 2014-15ல் இந்த எண்ணிக்கை 48,416 ஆக இருந்தது 2017-18 நிதி ஆண் டில் 81,344 ஆக உயர்ந்துள்ளது.இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா கூறுகையில், “இந்த எண்ணிக்கை வளர்ச்சிக்கு, சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அமல்படுத்தல் போன்றவற்றில் வரித்துறை கடந்த நான்கு வருடங்களில் செய்த சீர்திருத்த முயற்சிகள்தான் காரணம்” என்றார்.மொத்தமாக வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண் ணிக்கை 80 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. 2013-14ல் 3.79 கோடியாக இருந்தது, 2017-18ல் 6.85 கோடியாக உயர்ந்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in