

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போரின் விளைவாக சீனா வில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் பிற நாடு களைவிட சீனா கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.ஆப்பிள் ஐ போன் மற்றும் டெஸ்லா நிறுவனத் தயாரிப்பு களுக்கு தொடு திரையை தயாரித்து அளிக்கிறது சீனாவைச் சேர்ந்த லென்ஸ் டெக்னாலஜி நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைவர் ஷோவ் குன்பெய். இவரது சொத்து மதிப்பு 66 சதவீத அளவுக்கு சரிந் துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இவர் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு 660 கோடி டாலர் அளவுக்கு சரிந்துள்ளது. புளூம்பெர்க் பட்டிய லிடும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றிருந்தார்.சீனாவின் ஹூனான் மாகாணத் தில் 1970-ல் பிறந்த ஷோவ், பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்.
பிறகு வேலை பார்த்து மாலை நேர வகுப் பில் படித்தவர். ஆறு ஆண்டுகள் ஒரு கண்ணாடி தயாரிப்பு நிறுவ னத்தில் பணியாற்றினார். பின்னர் ஷென்சென்னில் தனியாக ஆலை தொடங்கினார். பின்னாளில் இது லென்ஸ் டெக்னாலஜி என்றழைக் கப்பட்டது. இவரது கணவர் ஷெங் ஜூன்லோங் இந்நிறுவனத்தில் துணைத் தலைவராக உள்ளார்.லென்ஸ் டெக்னாலஜி நிறுவனத் தின் பங்குகள் 62 சதவீத அளவுக்குச் சரிந்துள்ளன.
இவர் மட்டுமின்றி சீனாவின் கோடீஸ்வரர்களான அலி பாபா குழுமத் தலைவரான ஜாக் மா மற்றும் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் தலைமைச் செயல் அதிகாரி மா ஹியூடெங் ஆகியோ ரின் சொத்து மதிப்பும் சரிந்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்களில் 500 பேர் பட்டியலில் இடம்பெற்ற சீனர்களின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 8,600 கோடி டாலர் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.வர்த்தக போர் காரணமாக சீனாவின் பங்கு சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளது.ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் சீன நிறுவனங்கள் பலவற்றின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.
சீன தயாரிப்புகள் மீது கூடுத லாக 26,700 கோடி டாலர் வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஏற்கெனவே 20,000 கோடி டாலர் வரி விதிக்கப் பட்டுள்ளதோடு கூடுதலாக 26,700 கோடி டாலர் வரி விதிக்க பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது சீன தயாரிப்புகளின் பங்கு விலை வீழ்ச்சிக்கு காரணமானது.லென்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம் டெஸ்லா நிறுவனத்துக்கு டிஸ்பிளே பேனல்களை சப்ளை செய்து வருகிறது.‘