

ஜூலை மாத மொத்த விலை குறியீட்டு எண் (டபிள்யூ.பி.ஐ) 5.19 சதவீதமாக குறைந் திருக்கிறது. கடந்த ஜூன் மாதம் இது 5.43 சதவீதமாக இருந்தது. எரிபொருட்களின் விலை குறைந்ததால் பணவீக்கம் குறைந்திருக்கிறது. ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு மொத்தவிலைக் குறியீட்டு எண் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் மொத்த விலை குறியீட்டு எண் 5.85 சதவீதமாக இருந்தது.
மாறாக நுகர்வோர் விலை குறியீட்டு எண் அதிகரித்து 7.96 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் இது 7.46 சதவீதமாக இருந்தது. காய்கறிகள், பால் மற்றும் பழங்களின் விலை அதிகரித்ததுதான் இதற்கு காரணமாகும். நுகர்வோர் பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்கு 45 சதவீதமாக இருக்கிறது. ஆனால் மொத்த விலை குறியீட்டு எண்ணில் இது 14.34 சதவீதமாக இருக்கிறது.
பழங்களின் விலை ஜூலை மாதத்தில் 31.71 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பணவீக்கம் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றங்களும் செய்ய வாய்ப்பு இல்லை என்று பிக்கி தலைவர் சித்தார்த் பிர்லா தெரிவித்தார்.
பணவீக்கம் அதிகரிப்பது கவலையளிப்பதாக இருக் கிறது. பருவமழை குறைவது உற்பத்தியை மேலும் பாதிக்கும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று அசோசேம் தலைவர் ராணா கபூர் தெரிவித்தார்.