Published : 24 Aug 2018 11:52 AM
Last Updated : 24 Aug 2018 11:52 AM

டிவிஎஸ் ரேடியோன் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிதாக ரேடியோன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் அதிக மக்கள் விரும்பும் மோட்டார் சைக்கிள் சந்தையில் இறங்கியுள்ளது. நேற்று நடை பெற்ற அறிமுக நிகழ்ச்சியில் நிறுவ னத்தின்  இணை நிர்வாக இயக்கு நர் சுதர்சன் வேணு பேசுகையில்,

வாடிக்கையாளர்களுக்கு மேம் பட்ட மோட்டார் சைக்கிள் அனு பவத்தை அளிக்க வேண்டும் என்கிற வகையில் புதிய பிரிவில் இறங்கியுள்ளோம். 110 சிசி பிரிவில் மேம்பட்ட வடிவமைப்பு, புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட இன்ஜின், அதிக கிரவுண்ட் கிளி யரன்ஸ் என வாடிக்கையாளர் களை ஈர்க்கும் அம்சங்களுடன் இருக்கும். நகர்ப்புற போக்கு வரத்து நெரிசல், மற்றும் கிராமப்புற சாலைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைத்துள்ளோம் என்றார்.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேஎன் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,    மோட்டார் வாகன சந்தையில் 7 சதவீத சந்தையை டிவிஎஸ் வைத்துள்ளது

என்றார். மேலும் பண்டிகைக் காலம் மற்றும் புத்தாண்டை இலக்கு வைத்து புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆண்டில் 2 லட்சம் ரேடியோன் மோட்டார் சைக்கிள்களை விற்க இலக்கு வைத்துள்ளோம். அடுத்த மாதத்திலிருந்து விற்பனை தொடங்கு வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார். இந்த மோட்டார் சைக்கிளின் டெல்லி விற்பனையக விலை ரூ.48,400 ஆகும்.

புதிய மோட்டார் சைக்கிள் உருவாக்கத்துக்கான ரூ.60 கோடி வரை நிறுவனம் முதலீடு செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அகலமான மற்றும் வசதி யான சீட்கள், பிரேகிங் தொழில் நுட்பங்களில் புதுமை, அதிக சக்தி கொண்ட முகப்பு விளக்கு, எளிதான கிரவுண்ட் ரீச்சபிள் என இந்த பிரிவில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற வசதிகள் இதில் உள்ளன. 10 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி கொண்டது. 69.3 கிமீ மைலேஜ் அளிக்கும் என்று சுதர்சன் வேணு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x