

ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் (எஸ்பிடி) குழந்தைகளுக்கான தொடர் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
18 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ``ட்விங்கிள் த்ரிஃப்ட் டெபாசிட் திட்டம்’’ எனப்படும் இந்தத் திட்டத்தில் 10 வயது முதல் 18 வயதுக்குள்ளான சிறுவர், சிறுமியர் நேரடியாக கணக்கைத் தொடங்கலாம். 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் பெற்றோர், பாதுகாவலர் உதவியுடன் கணக்கைத் தொடங்கலாம்.
இந்த சேமிப்புத் திட்டத்தில் தொடக்க தொகை ரூ.500 பிறகு குறைந்த பட்சம் ரூ. 100 மற்றும் அதன் மடங்கில் சேமிக்கலாம். குறைந்தபட்ச காலம் மூன்று ஆண்டுகளாகும். அதிகபட்சம் 10 ஆண்டுகளாகும். சேமிப்புக்கான வட்டித் தொகை 9 சதவீதமாகும்.
உயர் கல்வி, திருமணம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க இந்த சேமிப்பு உதவியாக இருக்கும் என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு எஸ்பிடி புதிய நிரந்தர சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 700 நாள்களுக்கு 9.15 சதவீத வட்டி அளிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு ரூ. 1 கோடிக்கு குறைவான தொகைக்கு 9.45 சதவீத வட்டி அளிக்கப்படும்.