

ரூ.50 கோடிக்கும் அதிகமான வாராக்கடன்களில் நிகழ வாய்ப் புள்ள மோசடிகளை பொதுத் துறை வங்கி தலைமைச் செயல் அதிகாரிகள் கவனிக்கவேண்டும் என்றும், கவனக்குறைவாக இருந்து மோசடிகள் நிகழும்பட்சத்தில் வங்கி தலைமைச் செயல் அதிகாரிகள்மீது கிரிமினல் சட்டம் பாயும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் எச்சரித் துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் உரிமையாளர் நீரஜ் சிங்கால், தீவிர மோசடி விசாரணை அலுவல கத்தால் (எஸ்எஃப்ஐஓ) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நிதி அமைச்சகம் இத்தகைய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மோசடிகளை சரியாக அரசுக்கு தெரிவிக்காமல், பின்னாளில் விசா ரணை அமைப்புகள் மோசடியை கண்டறியும்பட்சத்தில் இந்திய தண்டனை சட்டம் 120பி பிரிவுப்படி வங்கி அதிகாரிகள்மீது நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடி
இந்திய பொதுத் துறை வங்கிகள் மிக அதிக அளவில் வாராக்கடன் பிரச்சினைகளை சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி இந்திய வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதுதவிர பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
12 நிறுவனங்களுக்கான திவால் தடுப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை களை வங்கிகளும், விசாரணை அமைப்புகளும் ஆய்வு செய்து வரும் நிலையில் இவற்றில் இடம் பெற்றுள்ள ஸ்டீல் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனக் கணக்குகளில் சில முரண்பாடுகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாக அதி காரி ஒருவர் தெரிவித்தார். தேவைப் பட்டால் இதுதொடர்பாக மீண்டும் தணிக்கை நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், பொதுத் துறை வங்கிகளிடம் இருந்துபெற்ற ரூ.2,000 கோடியில் முறைகேடு செய்ததாக பூஷன் ஸ்டீல் நிறு வனத்தின் சிங்கால், தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தால் கைது செய்யப்பட்டிருந்தார். இதுபோன்ற மோசடியில் வேறு சில நிறுவன உரிமையாளர்களும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாக மற்றொரு அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்புக்கு உள்ளாக் கப்பட்டுள்ள நிறுவனங்களின் கணக்குகளையும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஆய்வு செய்யும் என தகவல்கள் தெரி விக்கின்றன.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம், ரூ.5,000-க்கும் கோடிக்கும் அதிகமான கடன் சுமை உடைய, வங்கிகளின் வாராக் கடனில் 25 சதவீதம் அளவுக்கு பங்களிக்கக் கூடிய 12 நிறுவனங்களைக் கண்டறிந்த ரிசர்வ் வங்கி, புதிய திவால் சட்டப்படி இந்த நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை தொடங்கியது. கடந்த ஆகஸ்ட்டில் மேலும் 28 நிறுவனங்களை திவா லாக வாய்ப்புள்ள நிறுவனங்களாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இவற் றில் சில நிறுவனக் கணக்குகளில் மோசடி நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ள தாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
புதிய திவால் சட்டப்படி நிறு வன மறுசீரமைப்பை மேற்கொள் ளும் வங்கிகள் 2 ஆண்டுகளுக்கு பரிவர்த்தனை தணிக்கை மேற் கொள்ளவேண்டும். தகவல்கள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் தடயவியல் தணிக்கை யும் செய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.