

வாட்ஸ்அப் செயலி மூலம் வதந்தி கள் பரவுவதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை கேட் டுக் கொண்டுள்ளது. மேலும் இந் தியாவுக்கென மையம் அமைத்து வாட்ஸ்அப் நிறுவனம் செயல் படவும் வலியுறுத்தியுள்ளது.
இந்திய சட்டத் திட்டங்களுக்கு எதிராக வாட்ஸ்அப் செயலியில் செய்திகள் பரப்பப்படுகின்றன என்கிற புகார் வந்ததையடுத்து மத்திய அரசு வாட்ஸ்அப் செயலி நிறுவனத்துக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இந்தியாவில் தகவல் சேகரிப்பு மையம் அமைக்கவேண்டும் என் றும் குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்கவும் கேட்டுக் கொண் டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலை மைச் செயல் அதிகாரி கிறிஸ் டேனி யலுடனான சந்திப்புக்கு பின்னர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், வாட்ஸ் அப் செயலியை தவறாக பயன்படுத்தாத வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் சட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் கேட் டுக் கொண்டுள்ளேன். இதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள் வதாக வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
டேனியல் ஐந்து நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் பல்வேறு தொழில் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
வாட்ஸ் அப் நிறுவனம் இந்தியா வில் தொழில்நுட்ப தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு எதிர்பார்க் கிறது. குறிப்பாக நாடு முழுவதும் பல இடங்களில் வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல்களும், வதந்தி களும் பரப்படுகின்றன. இதனால் வதந்திகளை யாரிடமிருந்து பரவு கிறது என்பதை கண்டறிவதற்கு வாட்ஸ் அப் உதவ வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது.
``வதந்திகள் ராக்கெட் வேகத்தில் பரவுகிறது. வதந்தி யாரிடமிருந்து பரவுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னரே ஆயிரம் பத்தாயிரமாக பரவிவிடுகிறது. இதனால் இதற்கான தீர்வுகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்’’ என்று சந்திப்புக்கு பின்னர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை வாட்ஸ் அப் மேற்கொள்ளவில்லை என்றால் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.
வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் வதந்திகள் மூலம் நாட்டின் பல இடங்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அசாம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, திரிபுரா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங் களில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால் வாட்ஸ்அப் மூலம் பர வும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு முன்னர் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு இரண்டுமுறை மத்திய அரசு கடிதம் எழுதியுள் ளது. செய்திதாள்கள், ரேடியோ உள் ளிட்ட வழிகள் மூலம் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை களை எடுக்க வலியுறித்தியுள்ளது.
இதனிடையே வாட்ஸ் அப் நிறு வனம் செயலியில் செய்திகளை பரிமாற்றம் செய்வதில் கட்டுப்பாடு களை கொண்டு வந்துள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் மூலம் பணப்பரிமாற்ற சேவை குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.
இந்தியாவில் 20 கோடி பேருக்கு மேல் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் 150 கோடி பயனாளிகள் வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர்