

ஆந்திர மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்கப் போவதாக கோத்ரெஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. புதிதாக அமையவுள்ள ஆலையில் சோப்புகள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்முகாஷ்மீரில் செயல்பட்டுவரும் ஆலைகளை விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விவேக் காம்பீர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் விரிவாக்கம் செய்வதால் நிறுவனத்துக்கு சில சலுகைகள் கிடைக்கும். இதேபோன்ற சலுகைகள் கிடைக்கும் மாநிலங்களில் புதிய ஆலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
அந்த வகையில் சீமாந்திராவில் ஆலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை தீவிரமாக பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.