Published : 21 Aug 2018 09:05 AM
Last Updated : 21 Aug 2018 09:05 AM

இங்கிலாந்தில் நீரவ் மோடி: இந்தியாவுக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்தில் இருப்பதாக  உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசு அதிகாரிகள் இதை உறுதிசெய்துள்ளனர்.  இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து ரூ.13,500 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

2011 ஆம் ஆண்டு முதல் பிஎன்பி வங்கியிடமிருந்து நீரவ் மோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளார். அவர் மோசடியில் ஈடுபட்ட விஷயம் தெரியவந்ததும் அவர் மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. ஆனால் அவரை கைது செய்து விசாரிப்பதற்கு முன்னரே இந்த ஆண்டு தொடக்கத்தில் குடும்பத்தோடு இந்தியாவிலிருந்து தப்பியோடி விட்டார். அவர் இங்கிலாந்தில் தலைமறைவாக இருக்கிறார் என இந்தியா தொடர்ந்து கூறி வந்தது.

அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அரசு தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. இந்நிலையில்தான்  நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வர இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தின் சிறப்பு பிரிவின் மூலம் நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நீரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதுடன் ரெட் கார்னர்

நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள தாக சிபிஐ கூறி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x