Published : 28 Aug 2018 08:42 AM
Last Updated : 28 Aug 2018 08:42 AM

தலைமறைவு குற்றவாளி விஜய் மல்லையா- செப்டம்பர் 3-ல் அடுத்த விசாரணை

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து தப்பி சென்ற விஜய் மல்லையாவின் வழக்கு புதிய தலைமறைவு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறும் என மும்பை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது

பொருளாதார குற்றவாளி

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டப்படி பொருளாதார குற்றங்கள் செய்த வர்கள் மீதான வழக்கு நிலுவை யில் உள்ள போது, நீதிமன்ற விசாரணைகளில் கலந்துகொள்ளா மல், இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புகளிலிருந்து தப் பித்து தலைமறை வானால், அவர் களை தலைமறைவு குற்றவாளி யாக அறிவித்து அவர்களது சொத்துக்களை உடனடி யாகப் பறிமுதல் செய்யலாம் என்ற அதிகாரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டது. இந்தப் புதிய சட்டத்தின் கீழ் நிதிமன்ற விசா ரணைகளை மதிக்காமல் இங் கிலாந்து தப்பி சென்று தலைமறை வாகி நாட்டுக்குத் திரும்பி வர மறுக்கும் விஜய்மல்லையா ‘தலை மறைவு பொருளாதார குற்றவாளி’ என்று அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 30ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 27 அன்று விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி யிருந்தது. ஆனால் நேற்று நடந்த விசாரணையில் விஜய் மல்லையா ஆஜராகவில்லை. மாறாக அவரது வழக்கறிஞர் அவருக்காக ஆஜ ராகி வாதிட்டார்.

அப்போது இந்த வழக்கில் விஜய் மல்லையா தவிர்த்து அவரது குடும்பத்தினர் உட்பட ஐந்து தரப்பினர் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் மல்லை யாவை பொருளாதார குற்றங் கள் செய்து தப்பியோடி தலை மறைவானவர் என்ற சட்டத்தின் கீழ் அறிவிப்பதற்கான ஆதாரங் களையும் கேட்டுள்ளனர். எனவே, வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும் என்று பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் ஆஸ்மி தெரிவித்தார்.

ரூ.9,990.07 கோடி கடன் பாக்கி

தற்போது இந்தப் புதிய சட்டத் தின்படி பதிவு செய்யப்பட்ட வழக் கில் கிங் ஃபிஷர் மதுபான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிக ளில் வாங்கிய கடன் பாக்கி வட்டியு டன் சேர்த்து ரூ. 9,990.07 கோடியாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x