நிப்டி மிட்கேப் குறியீட்டில் மாற்றம்

நிப்டி மிட்கேப் குறியீட்டில் மாற்றம்
Updated on
1 min read

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அதானி பவர் மற்றும் அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் நிப்டி 50 மிட்கேப் குறியீட்டில் வெளியேறும்.

இதற்கு பதிலாக அர்விந்த், ஜஸ்ட் டயல், எல் அண்ட் டி பைனான்ஸ் ஹோல்டிங் ஆகிய பங்குகள் நிப்டி மிட்கேப் குறியீட்டில் சேரும். இந்த மாற்றம் வரும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஸ்மால்கேப், ஐடி, இன்பிரா ஆகிய குறியீடுகளிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

சி.என்.எக்ஸ் மிட்கேப் குறியீட்டில் அதானி என்டர்பிரைஸஸ், அதானி போர்ட்ஸ், மெக்லியோட் ரஸல் மற்றும் யூகோ வங்கி ஆகிய பங்குகள் வெளியேறின. இதற்கு பதிலாக இந்தியன் ஆயில், ரான்பாக்ஸி, ஹெச்.டி.ஐ.எல். மற்றும் ஐ.ஆர்.பி. இன்பிரா பங்குகள் சேர்க்கப்பட்டன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in